நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் தினங்களே உள்ள நிலையில், நிஃப்டி 2.5% ஏற்றத்தில் காணப்படுகின்றது. அதானி எண்டர்பிரைசஸ், ஐடிசி, கோல் இந்தியா, மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் இந்தஸ்இந்த் வங்கி உட்பட 28 நிறுவனங்கள் நடப்பு ஆண்டில் நல்ல வருமானத்தை வழங்கியுள்ளன.
2023ம் ஆண்டிற்கான சில சிறந்த நிஃப்டி பங்குகளை தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்துள்ளன.
இதில் ஆக்ஸிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி பங்குகள் லிஸ்டில் உள்ளன. இதில் இன்ஃபோசிஸ் மற்றும் ஹெச் டி எஃப் சி லைஃப் ஆகியவை செயல்படாத சில பங்குகளாக இருந்தன. இது 2023ல் மீண்டும் மீண்டு வருகின்றன. 2023 தேர்வுகளில் ஒரு சில எஃப் எம் சி ஜி மற்றும் ஐடி துறைகளில் இருந்தும் விரும்புகின்றனர்.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் தொடர்ச்சியான வாடிக்கையாளர் கவனம், டிஜிட்டல் திறன்கள் மற்றும் மேக்ரோ சந்தையின் அடிப்படையிலான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில், செப்டம்பரில் 25% வலுவான சில்லறை வளர்ச்சியினையும், SMB வளர்ச்சி 36% பெற்றுள்ளது என பிரபு தாஸ் லில்லாதேர் நிறுவனத்தின் விக்ரம் கசத் தெரிவித்துள்ளார். இது இனியும் வளர்ச்சி காணலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
சிப்லா
சிப்லா நிறுவனம் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இது தொடர்ந்து அதன் வணிகத்தினை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், அதன் போர்ட்போலியோவினையும் விரிவாக்கம் செய்து வருகின்றது. அது 2023ம் ஆண்டின் பிற்பாதியில் நல்ல வளர்ச்சியினை காணலாம் என தெரிவித்துள்ளது.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி வங்கி தொடர்ந்து அதன் சில்லறை வங்கி வணிகத்தில் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகின்றது. அதன் வாரக்கடன் விகிதமும் தொடர்ந்து குறைந்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக தொடர்ந்து அதன் நெட்வொர்க்கினை வேகமாக விரிவாக்கம் செய்து வருகின்றது. இதன் கார்டு வணிகமும் மேம்பட்டு வருகின்றது. இதற்கிடையில் இதன் நிதி நிறுவனமான ஹெச் டி எஃப் சியும் விரைவில் இணைக்கப்படலாம் எனவும் தெரிகிறது. இதுவும் அதன் வணிகத்தினையும், வளர்ச்சியினையும் அதிகரிக்க உதவலாம். இதற்கிடையில் தான் இந்த பங்கினை வாங்கலாம் எனவும், இதன் இலக்கு விலையாக 1908 ரூபாயாகவும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இன்ஃபோசிஸ்
சர்வதேச நாடுகளின் வளர்ச்சி விகிதமானது தொடர்ந்து வளர்ச்சி கண்டு வரும் நிலையில், ஐடி துறையானது விரைவில் மீண்டும் வரலாம் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதமும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் இதன் பங்கு விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட்
ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனம் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவையானது மீண்டு வரலாம். இதன் காரணமாக பலனடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விழாக்கால பருவம், சரியான பருவகாலம் என்பதால் கிராமப்புற சந்தைகளும் மீண்டு வரத் தொடங்கியுள்ளன. இதன் காராணமாக இதன் விற்பனை அதிகரிக்கலாம். இதனால் அதன் மார்ஜின் விகிதமும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு நிறுவனம் தொடர்ந்து வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக முதலீடும் செய்து வருகின்றது.
ஹெச் டி எஃப் சி லைஃப்
இந்தியாவில் தொடர்ந்து இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வானது அதிகரித்து வரும் நிலையில், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமான ஹெச் டி எஃப் சி லைஃப் வளர்ச்சியும் எதிர்காலத்தில் மேன்மையடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பிரீமிய வளர்ச்சியானது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதன் வளர்ச்சி விகிதமானது இன்னும் மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் வருவாய் வளர்ச்சிக்கான நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், அதன் செலவு குறைப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது. இதன் காரணமாக அதன் மார்ஜின் விகிதமானது மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் என்னென்ன பங்குகள்
இது தவிர லார்சன் & டூப்ரோ, எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உள்ளிட்ட சில பங்குகளையும் வாங்க பரிந்துரை செய்துள்ளது.
மேற்கண்ட நிறுவனங்கள் பலவும் 2023ல் நல்ல லாபம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications