DLF, மேக்ரோடெக், ஷோபா நிறுவனங்களை வாங்கலாம்..ஏன்.. உங்கள் வசம் இருக்கா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமீப வாரங்களாகவே இந்திய பங்கு சந்தையானது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்த போக்கு இனி வரும் வாரங்களில் தொடரலாம் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.

குறிப்பாக அன்னிய முதலீடுகளின் வரத்து என்பது கணிசமாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதச நாடுகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்திய சந்தையில் வளர்ச்சி மீண்டும் உச்சம் தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேகர் ஷர்மாவின் கனவெல்லாம் இப்படியாகிடுச்சே.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் ஆல் டைம் லோ! விஜய் சேகர் ஷர்மாவின் கனவெல்லாம் இப்படியாகிடுச்சே.. பேடிஎம் பங்கு விலை மீண்டும் ஆல் டைம் லோ!

வளர்ச்சி மேம்படலாம்

வளர்ச்சி மேம்படலாம்

இந்த காலகட்டத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் தேவையானது கணிசமாக அதிகரித்து வருகின்றது. இந்த போக்கானது நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நல்ல வளர்ச்சியினை கண்டது. இது இன்னும் சிறிது காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவி வரும் தேவைக்கு மத்தியில், டெவலப்பர்கள் மத்தியில் பணப் புழக்கம் என்பது அதிகரிக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

மீண்டு வரத் தொடங்கிய வளர்ச்சி

மீண்டு வரத் தொடங்கிய வளர்ச்சி

கொரோனா காலகட்டத்தில் நிறுவனத்தின் செயல்பாட்டு மூலதனம் மற்றும் கடன் அதிகரிப்பு,பணப்புழக்கம் என அனைத்தும் பாதிக்கப்பட்டது. இது கொரோனாவுக்கு பிறகு மீண்டு வரத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து இந்த போக்கானது மேம்பட்டு வருகின்றது. இதற்கிடையில் இதன் காரணமாக ரியால்டி நிறுவனங்களின் வளர்ச்சியானது மேம்படலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

பரிந்துரை

பரிந்துரை

எனினும் இந்த காலகட்டத்திலேயே ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் சூழலில், வட்டி அதிகரிப்பு என்பது கவலையளிக்கும் காரணிகளில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. எனினும் இந்த காலகட்டத்திலும் கவனிக்க வேண்டிய மூன்று பங்குகளை தரகு நிறுவனம் கணித்துள்ளது.

இதில் டி எல் எஃப், ஷோபா, நிறுவனங்கள் வசம் கடனை செலுத்தியுள்ள நிலையில், அவர்கள் வசம் உபரி தொகையும் அதிகம் உள்ளது. ஆக எடில் வைஸ் நிறுவனம் தன்னுடைய பரிந்துரையில் சிறந்த பங்காக இதனை தேர்வு செய்துள்ளது.

 வாங்க பரிந்துரை

வாங்க பரிந்துரை

மீடியம் டெர்மில் வட்டி அதிகரிப்பு என்பது தாக்கத்தினை ஏற்படுத்தினாலும், ரியால்டி பங்குகள் நல்ல வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிறுவனத்தின் அளவு மற்றும் இட அளவு மற்றும் பணப்புழக்கம் அதிகரிப்பு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அந்த வகையில் டி எல் எஃப் மற்றும் ஷோபா மற்றும் மேக்ரோடெக் உள்ளிட்ட நிறுவனங்களை வாங்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.

டிஎல்எஃப்

டிஎல்எஃப்

டிஎல்எஃப் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் அதிகளவிலான செயல்பாட்டு தொகையினை கொண்டிருந்தது. இதனால் உபரியின் மூலம் நல்ல வளர்ச்சியினை காண வழிவகுத்தது. வட்டி செலவினமும் குறைந்தது. இதே காலகட்டத்தில் போட்டி நிறுவனங்கள் அதிகளவிலான கடன் வளர்ச்சியினை கண்டுள்ளன. இது வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்

வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்

ஏற்கனவே டிஎல்எஃப் நிறுவனத்தின் இட வங்கிகள் மற்றும் குறைவான முதலீட்டு தேவை என்பது பணப்புழக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம் . இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் டிஎல் எஃப் தேவையான இடங்களை ஏற்கனவே வைத்துள்ளது. இது இந்த நிறுவத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். போட்டி நிறுவனங்கள் பலவும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நிலையில், இது டிஎல்எஃப் பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Brokerage recommended to buy 3 realty stocks including DLF, Macrotech, Shoba

Experts suggest buying these realty stocks including DLF, Macrotech, Shoba
Story first published: Wednesday, November 30, 2022, 17:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X