3 மாதத்தில் நல்ல லாபம் கொடுக்கலாம்.. தரகு நிறுவனத்தின் சூப்பர் கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வாரங்களாகவே நிலவி வரும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் நிலவி வருகின்றது. இதற்கிடையிலும் தரகு நிறுவனங்கள் சில பங்குகளை வாங்கி வைக்கலாம் என கணித்துள்ளது.

 

ஏன் இந்த சவாலான காலகட்டத்திலும் வாங்க பரிந்துரை செய்துள்ளது. அது என்ன பங்குகள்? இலக்கு விலை என்ன? மற்ற கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியர்களின் விருப்பமான முதலீடு எது.. ஜெஃப்ரிஸ் சொல்லும் விஷயத்தை பாருங்க!

தொடர் ஏற்றத்தில் பங்கு

தொடர் ஏற்றத்தில் பங்கு

42,078 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை கொண்ட பிரபல எலக்ட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த, லார்ஜ் கேப் நிறுவனமான போஸ் (Bosch Ltd) நிறுவனம், கடந்த 5 நாட்களில் மட்டும் 7.44% ஏற்றம் கண்டுள்ளது. இப்பங்கின் விலையானது என் எஸ் இ-யில் 14,300 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் இருந்து வெள்ளிக்கிழமையன்று 3.46% ஏற்றத்தில் முடிவடைந்தது.

இலக்கு விலை எவ்வளவு?

இலக்கு விலை எவ்வளவு?

கிட்டத்தட்ட கடனில்லா நிறுவனமான போஸில், அதன் புரோமோட்டர் பங்கு விகிதமானது ஒரே மாதிரியாக இருந்து வருகின்றது. இதன் இலக்கு விலையாக 15,500 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் ஆக 12,700 ரூபாயினையும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

தரகு நிறுவனமான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், இந்த பங்கினை வாங்கலாம் எனவும், மூன்று மாதத்தில் இப்பங்கின் விலையானது 13,900 - 14250 ரூபாயாகவும் ஏற்றம் காணலாம் என கணித்துள்ளது.

 

டெக்னிக்கல் பேட்டர்ன்
 

டெக்னிக்கல் பேட்டர்ன்

ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அறிக்கையின் படி, கடந்த சில ஆண்டுகளாகவே இப்பங்கின் விலையானது நல்ல ஏற்றத்தினைத் கண்டுள்ளது. கடந்த மே மாதத்தில் இப்பங்கின் விலையானது டபுள் பாட்டம் பேட்டர்ன் பார்ம் ஆகிய நிலையில், இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இப்பங்கின் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஏஜிஆர்

சிஏஜிஆர்

இந்த நிறுவனத்தின் சிஏஜிஆர் விகிதம் வரவிருக்கும் ஆண்டுகளில் நல்ல வளர்ச்சியினை எதிர்பார்க்கலாம். இது நிறுவனத்தின் மார்ஜின் விகிதத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்கினில் ஏற்றத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கலாகவும் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Broking firm suggests to buy this debt free stock

Brokerage firm ICICI Securities has forecast that it will buy the stock and that the price of the stock could rise to Rs 13,900 - 14250 in three months.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X