அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான 12 நாள் மோதலுக்கு முடிவு கட்டி, போர் நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, உலக பங்குச் சந்தைகள் நம்பிக்கையுடன் உயர்ந்தன.
இஸ்ரேல் பங்குச் சந்தை கடந்த ஐந்து நாட்களில் 4% உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது. வளைகுடா நாடுகளில், சவுதி அரேபியாவின் முக்கிய குறியீடு 2.1% உயர்ந்தது, துபாயின் பங்குச்சந்தை 3.1% உயர்ந்து, டிசம்பர் மத்தியில் இருந்து மிகப்பெரிய ஒரு நாள் உயர்வைப் பதிவு செய்ததுள்ளது. கடைசியாக நேற்று ஈரான் நாட்டின் ஏவுகணை தாக்குதலை எதிர்கொண்ட கத்தார் பங்குச்சந்தை குறியீடு 2% உயர்ந்தது.

ஆனால், இந்தியாவில் சென்செக்ஸ் இன்று ஆரம்பக்கட்ட உயர்வான 1100 புள்ளிகள் உயர்வில் இருந்து 800 புள்ளிகள் சரிந்து. இன்று அமெரிக்காவில் S&P 500 குறியீடு 1%க்கு மேல் உயர்ந்து, நாளை ஆசிய சந்தைகளுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. இதனால், ஜூன் 25 அன்று இந்திய பங்குச் சந்தை, குறிப்பாக வங்கி மற்றும் உள்கட்டமைப்பு பங்குகள், நிலையான முன்னேற்றத்துடன் தொடங்கலாம்.
இத்தகைய போர் கால பதற்றங்களுக்கு மத்தியில், முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளைப் பாதுகாக்க மூன்று முக்கிய உத்திகளைப் பின்பற்றலாம். புவிசார் அரசியல் நெருக்கடிகளின் போது பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகளைப் பாதுகாக்க, முதலீட்டாளர்கள் மூன்று அடிப்படை உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.
முதலாவதாக, பயத்தால் பங்குகளை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும். பங்குச்சந்தை சரிவு ஏற்படும்போது, பங்குகளை உடனடியாக விற்பது இழப்புகளை அதிகரிக்கலாம். எடுத்துக்காட்டாக, இந்திய சந்தையின் சமீபத்திய சரிவு தற்காலிகமானது தான். இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டு மதிப்பை இழக்கிறோம் என பயத்தில் பங்குகளை விற்பனை செய்தால் பெரும் லாபத்தை இழக்க கூடும். இதனால் பொறுமையாக இருப்பவர்கள் அதிக லாபத்தை காணலாம். இதேபோல் நீங்கள் செய்துள்ள முதலீடுகள் அனைத்தும் நிதியியல் அடிப்படையில் வலுவான நிலையில் இருக்கிறதா என்பதை முதலில் உறுதி செய்துக்கொள்ளுங்கள்.
இரண்டாவதாக, எப்போதும் உங்கள் பங்குச்சந்தை முதலீட்டை பன்முகப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம். உங்கள் முதலீடு பங்குகள், பத்திரங்கள், தங்கம், மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்வது, ஒரு துறையில் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய உதவும். இதேபோல் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீடுகளையும், துறைவாரியாகவும், சந்தை வாரியாகவும் ன்முகப்படுத்தி வைத்திருக்க வேண்டியது அவசியம்.
மூன்றாவதாக, முதலீட்டை நிலையாக தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குகளில் முதலீடு செய்வது, சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கத்தைக் குறைத்து, நீண்டகால லாபத்தை உறுதி செய்யும்.
முதலீட்டாளர்களுக்கு ஒரு அட்வைஸ்: புவிசார் அரசியல் நெருக்கடிகள், எண்ணெய் விலை மாற்றங்கள், மற்றும் உலகளாவிய பொருளாதாரப் போக்குகள் ஆகியவை பங்குச் சந்தைகளை எப்போதும் பாதிக்கும் காரணிகள். இஸ்ரேல்-ஈரான் போர் நிறுத்தம், எண்ணெய் விலைகளைக் குறைத்து, உலகளாவிய சந்தைகளுக்கு நம்பிக்கையை அளித்தாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தற்போதைய சந்தை சூழ்நிலையில் வங்கி, உள்கட்டமைப்பு, மற்றும் விவசாயத் துறை சார்ந்த பங்குகள் சரிவில் இருந்து வேகமாக மீட்சி அடையலாம். ஆனால் எதிர்பாராத சரிவுகளுக்கு தயாராக இருப்பது அவசியம். நீண்டகால முதலீட்டு இலக்குகளை மனதில் வைத்து, நிலையான முதலீட்டு முறைகளைப் பின்பற்றுவது, சந்தை ஏற்ற இறக்கங்களை எதிர்கொள்ள உதவும்.
More From GoodReturns

பக்ரைனில் ஈரானின் சைபர் போர்! அமேசான் கிளவுட் முடக்கம்? அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலா?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

திடீரென பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய Shell நிறுவனம்..!! வாகன ஓட்டிகளே கவனம்..!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

Germany: கிளீன் எனர்ஜி எல்லாம் இனி வேலைக்கு ஆகாது.. பழையப்படி நிலக்கரிக்கு போக வேண்டியது தான்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!



Click it and Unblock the Notifications