F&O வர்த்தகத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த பிடெக் மாணவன்.. பணம் எப்படி வந்தது தெரியுமா?

சென்னை: பணம் சம்பாதிப்பதற்கான யோசனை எல்லோருக்கும் இருக்கும். ஆனால், சில குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பது எதிர்பாராத சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்தக் கட்டுரை பங்குச்சந்தை வர்த்தகத்தின் ஆபத்துகள் மற்றும் சமூக வலைதளங்களின் தவறான பதிவுகள் குறித்து உங்களை எச்சரிக்கவே. ஒரு இளம் மாணவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை அடிப்படையாகக் கொண்ட உண்மை சம்பவத்தை இந்தப் பதிவில் பார்ப்போம்.

வருமான ஆதாரமே இல்லாத ஒரு இளம் மாணவர் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளார். அதன் விவரங்களை, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த Chartered Accountant ரோஷன் அகர்வால் பொது மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். தனது வாடிக்கையாளர்களில் ஒருவரான, அந்த மாணவர், வருமான ஆதாரம் இல்லாத 3-ஆம் ஆண்டு படிக்கும் B.Tech பட்டதாரி. இந்த மாணவர் 2023-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் நிதி ஆண்டில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு ரூ.26 லட்சம் நஷ்டத்தை சந்தித்ததாக ரோஷன் அகர்வால் கூறியுள்ளார்.

 F&O வர்த்தகத்தில் ரூ. 26 லட்சத்தை இழந்த பிடெக் மாணவன்.. பணம் எப்படி வந்தது தெரியுமா?

கடந்த ஆண்டு, வர்த்தகத்தில் ஈடுபட்டதன் விளைவாக, அந்த மாணவர் ரூ. 20 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். மேலும், மாணவர் தனது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய உதவுமாறு 2 ஆண்டுகளுக்கு முன்பு பேஸ்புக் வழியாக ரோஷன்-ஐ தொடர்பு கொண்டுள்ளார்.

ரூ. 20 லட்சம் ரூபாயை பங்குவர்த்தக மோசடியில் சிக்கி இழந்த அந்த மாணவரைப் பற்றிய விவரங்களை ரோஷன் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கூறிய ரோஷன் "அவரது பெற்றோர் பிரிந்துவிட்டனர். அவரது தாய் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார், ஆனால் இவர்களில் யாருக்கும் அந்த மாணவர் மோசடியில் சிக்கி பணம் இழந்தது பற்றி தெரியாது, என்று ரோஷன் அகர்வால் கூறியுள்ளார். அந்த மாணவருக்கு என்று தனிப்பட்ட வருமானம் எதுவும் இல்லை, மேலும் இது போன்ற வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக தனிப்பட்ட முறையில் நிதி நிறுவனங்களிடமிருந்து கடனை வாங்கியுள்ளார். அது மட்டுமின்றி நண்பர்களிடம் இருந்தும் பணத்தை திருப்பி தந்து விடுவதாக கூறி அந்த மாணவர் வாங்கியுள்ளார். அவரது பெற்றோரின் கணக்கில் இருக்கும் பணத்தை அவர்கள் அறியாமலேயே எடுத்துள்ளார் என்றும் ரோஷன் கூறியுள்ளார்.

மேலும் அந்த மாணவர் சமூக வலைதளங்களில் பார்க்கும் போஸ்டின் அடிப்படையில் நிதி முடிவுகளை எடுத்து வருவதாக ரோஷன் கூறியுள்ளார். யாரோ அந்த மாணவரின் நண்பர்களில் ஒருவர் கடந்த ஆண்டு பங்குச்சந்தை வர்த்தகத்தின் மூலம் ரூ. 1 கோடி சம்பாதித்துள்ளார். அந்த விவரங்களின் அடிப்படையில் இவரும் அதே போல சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி இது போன்ற வர்த்தகத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் ஈடுபட்டுள்ளார்.

முதலில் அந்த மாணவர் ரோஷனிடம் வரும்போது எளிமையான வழியில் பணம் சம்பாதிப்பதற்கான வழிகளை தேடுவதை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அப்போது அதை ஏற்றுக் கொண்டது போல் இருந்தாலும், அந்த மாணவர் மீண்டும் அதே போல நஷ்டத்துடன் திரும்பவும் ரோஷனிடம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வந்துள்ளார். ரோஷன் அந்த மாணவரிடம் ஏன் இப்படி மீண்டும் மீண்டும் வர்த்தகத்தில் ஈடுபடுகிறீர்கள்? என்று கேட்டதற்கு.. அந்த மாணவர் நான் டிரேடிங்கிற்கு அடிமையாகி விட்டேன், அதிலிருந்து விடுபட முடியவில்லை என்று பதிலளித்துள்ளார்.

தற்போது உள்ள தலைமுறையினர் போலி இன்ஸ்டாகிராம் போஸ்ட் போன்றவற்றிற்கு பலியாகி அதிக அளவிலான பணத்தை இழப்பது வேதனை அளிப்பதாக ரோஷன் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+