Budget 2019 இனி என்ன காரணங்களால் சந்தை ஏற்றம் காணும்..?

டெல்லி: நிர்மலா சீதாராமனின் 2019 - 220 நிதி ஆண்டு பட்ஜெட்டுக்கு சந்தை என்ன சொல்லப் போகிறது. சந்தையை ஏற்றம் காண வைக்க ஏதாவது காரணங்கள் இருக்கிறதா..?

ஏற்கனவே சென்செக்ஸ் பட்ஜெட் அன்று காலை 39,990 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, தன் உச்ச புள்ளியான 40,032 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது.

ஆனால் வர்த்தக நேரத்தின் முடிவில் சந்தை சுமார் 394 புள்ளிகள் சரிந்து 39,513 புள்ளிகள் நிறைவடைந்தது. இனி வரும் நாட்களில் இந்திய பங்குச் சந்தைக்கு வலு சேர்க்கும் விஷயங்கள் என்ன இருக்கிறது.

 நிதிப் பற்றாக்குறை & முதலீடுகள்

நிதிப் பற்றாக்குறை & முதலீடுகள்

1. நிதிப் பற்றாக்குறை - கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 3.4-ஆக இருந்தது. இந்த 2019 - 20-க்கு 3.3 சதவிகிதமாக குறைத்திருக்கிறார்கள்.
2. பொதுத் துறை வங்களுக்கான முதலீடுகள் - அரசுத் துறை வங்கிகளில் போதுமான பணம் இல்லாததால் சுமார் 40,000 கோடி ரூபாயாவது முதலீடுகள் கொடுக்கப்படும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது 70,000 கோடி அறிவித்து சந்தையை மேலும் உற்சாகப்படுத்திவிட்டார் நிதி அமைச்சர்.

 இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

3.(Infrastructure) உள்கட்டமைப்புக்கு 100 லட்சம் கோடி - அடுத்த ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு உள்கட்டமைப்புத் துறையில் சுமாராக 100 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. இதனால் பெரிய அளவில் வேலைவாய்ப்பும், அதனால் கிராம புற நுகர்வும் அதிகரிக்கும் என நம்புகிறது சந்தை.

 எஸ்டிடி & கார்ப்பரேட் வரி

எஸ்டிடி & கார்ப்பரேட் வரி

எஸ்டிடி குறைப்பு - Securities Transaction Tax என்றழைக்கப்படும் பங்கு பரிமாற்ற வரியைக் குறைத்திருக்க்கிறார்கள். இதுநாள் வரை 250 கோடி ரூபாய், ஆண்டு டேர்ன் ஓவர் பார்க்கும் நிறுவனங்கள் மட்டுமே 25% வரி செலுத்தினார்கள். ஆனால் இப்போது 400 கோடி ரூபாய் ஆண்டு டேர்ன் ஓவர் பார்க்கும் நிறுவனங்கள் ஆண்டுக்கு 25 சதவிகித வரி செலுத்தினால் போதுமானதாக இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களுமே பங்குச் சந்தை கொண்டாடும் கோலாகல அறிவிப்புகள் தான்.

 அந்நிய முதலீடுகள்

அந்நிய முதலீடுகள்

அந்நிய நேரடி முதலீடு - இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட், இன்ஷூரன்ஸ் ப்ரோக்கர், நிதி ஆலோசகர்கள் போன்றவர்களை எல்லாம் இன்ஷூரன்ஸ் இண்டர்மீடியரீஸ் எனச் சொல்வார்கள். இந்த துறையில் 100 சதவிகித அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரப் போகிறார்களாம். ஏவியேஷன், அனிமேஷன், விசுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக், இன்ஷூரன்ஸ் போன்ற துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீடு கொண்டு வர கலந்து பேசி ஒரு முடிவுக்கு வருவார்களாம். இதனாலும் சந்தை பூரிப்பில் குளிர்ந்திருக்கிறது.

 சொத்துக்களில் இருந்தும் வரும் வருமானம்

சொத்துக்களில் இருந்தும் வரும் வருமானம்

சொத்துக்களை விற்று வரும் வருமானம் - நிதி அமைச்சர் பட்ஜெட்டின் போது அரசுக்கு சொந்தமான சொத்துக்களை விற்று சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாயை ஈட்ட இருப்பதாகச் சொன்னதையும் சந்தை பாசிட்டிவ்வாக எடுத்துக் கொள்கிறது. எனவே இனி வரும் நாட்களில் மேலே சொன்ன காரணங்களால் சந்தை புதிய உயரங்களைத் தொடலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+