Budget 2021 எதிரொலி.. 2-வது நாளாகவும் 1,300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம்..!

பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பட்ஜெட் 2021 அறிவிப்புகள் நேற்று வெளியாகின. இதற்கிடையில் இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று வர்த்தக நேர முடிவில் சுமார் 2,300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது.

இது ஒரு சிறந்த பட்ஜெட் டே எதிரொலி என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவும் 22 ஆண்டுகளில் இது சிறந்த பட்ஜெட் நாள் என்றும் கூறியுள்ளனர்.

Budget 2021 எதிரொலி..  2-வது நாளாகவும் 1,300 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் ஏற்றம்..!

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் 1,400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டுள்ளது.

இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 320.47 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 48,921.07 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 229.70 புள்ளிகள் அதிகரித்து 14,510 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து சந்தையின் தொடக்கத்திலே ஏற்றத்தில் தொடங்கிய நிலையில், தொடக்கத்தில் சென்செக்ஸ் 734.26 புள்ளிகள் அதிகரித்து, 49,334.87 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 220.70. புள்ளிகள் அதிகரித்து, 14,501.90 புள்ளிகள் ஆகவும் வர்த்தகமாகியது. இதனையடுத்து 1027 பங்குகள் ஏற்றத்திலும், இதே 171 பங்குகள் சரிவிலும், 46 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், லார்சன், ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், ரிலையன்ஸ், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள லார்சன், ஹெச்டிஎஃப்சி வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி, எம் &எம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது பெரியளவில் மாற்றமின்றி 73.02 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதனையடுத்து தற்போது சென்செக்ஸ் 1,300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டும், நிஃப்டி மீண்டும் 14,600 மேலேயும் வர்த்தகமாகி வருகின்றது. இது தொடர்ச்சியாக ஏற்றம் கண்டும் வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+