இன்னும் சில தினங்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கிறது. இதற்கிடையில் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் இருந்து வருகின்றன.
இதற்கிடையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உள்கட்டமைப்பு துறைக்கு பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கும் உள்கட்டமைப்பு துறைக்கு, பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்படலாம். ஏற்கனவே உள்கட்டமைப்பு துறைக்கு பல திட்டங்களை வகுத்து வரும் நிலையில், அதற்கான நிதியினையும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
சிமெண்ட் நிறுவன பங்குகள்
ஆக உள்கட்டமைப்பு துறை மேம்படுத்தப்பட்டால், அதன் தாக்கம் சிமெண்ட் நிறுவனங்களிலும் இருக்கலாம். இது சிமெண்ட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு சாதகமாக அமையலாம். இதன் காரணமாக உள்கட்டமைப்பு துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சிமெண்ட் நிறுவன பங்குகள் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டார் சிமெண்ட் பங்கு
எம்கே குளோபல் நிறுவனம் இந்த சிமெண்ட் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. ஸ்டார் சிமெண்ட் நிறுவனத்தின் இலக்கு விலையானது 120 ரூபாயாக உள்ளது. தற்போதைய பங்கு விலை 94.30 ரூபாயாக உள்ளது.
பங்கு விலை நிலவரம்
கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி என்.எஸ்.இ-யில் இந்த பங்கின் விலையானது சற்று குறைந்து, 94.30 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதன் உச்ச விலை 95.70 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 94.15 ரூபாயாகும்.இதே இதன் 52 வார உச்ச விலை 120 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 75.35 ரூபாயாகவும் உள்ளது.
இதே பிஎஸ்இ-ல் இந்த பங்கின் விலையானது மாற்றமில்லாமல், 94.45 ரூபாயாக முடிவுற்றுள்ளது. இதன் உச்ச விலை 95.85 ரூபாயாகும். இதன் குறைந்தபட்ச விலை 94.10 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 120 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை 88.50 ரூபாயாகவும் உள்ளது.
எபிடா
மூன்றாவது காலாண்டில் ஸ்டார் சிமெண்ட்டின் எபிட்டா விகிதமானது கடந்த ஆண்டினை காட்டிலும் 20% குறைந்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 6% குறைந்து 675 மில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது. இது செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதன் வருவாயினை பாதித்துள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
வளர்ச்சி விகிதம்
நடப்பு நிதியாண்டில் வடகிழக்கு பகுதியில் 7% வளர்ச்சியும், கிழக்கு பகுதியில் 6-7% வளர்ச்சியும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியிருப்பினும் வரவிருக்கும் மத்திய பட்ஜெட் காரணமாக சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் ஸ்டாப் லாஸ் வைத்து வர்த்தகம் செய்யலாம்.


Click it and Unblock the Notifications