இந்திய பங்கு சந்தை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து ஏற்ற பாதையில் இருந்து வருகின்றது. எனினும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு , கடந்த 6 மாதத்தில் சற்றே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.
கடந்த 6 மாதத்தில் இந்திய பங்கு சந்தையில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையானது, கணிசமாக குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றது. இதற்கு என்ன காரணம்? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? இதற்கும் மத்திய பட்ஜெட்டிற்கும் என்ன சம்பந்தம்? வாருங்கள் பார்க்கலாம்.
என்ன பிரச்சனை?
முதலாவது ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, உள்நாட்டு பொருளாதார காரணிகள், விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம், விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் என பலவும் சந்தைக்கு எதிராகவே உள்ளது.
இரண்டாவது பங்கு சந்தையில் பற்பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மேலும் பிரச்சனையாக அமையலாம்.
சிக்கலான வரி திட்டங்கள்
மூன்றாவதாக சிக்கலான வரி திட்டங்கள் பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மேற்கொண்டு சுமையாக இருக்கலாம். இது சந்தையில் நுழைவதை தடுக்கலாம். இந்த பட்ஜெட்டில் பங்கு சந்தை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சில அறிவிப்புகளை கொடுக்கலாம்.
குறுகிய கால மூலதன வரி
பங்கு சந்தையில் கிடைக்கும் வருமானமும் பல வகையாக பிரிக்கப்படுகிறது. இதற்கு வரி விகிதமும் பல வகைகளில் பிடித்தம் செய்யப்படுகின்றது. ஆக பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களை ஊக்குவிக்க குறுகிய கால மூலதன ஆதாய வரியில் விலக்கு 1 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும். 111ஏ - வின் கீழ் @15% வரியுடன்+ செஸ்+ மற்ற கட்டணங்களும் வசூலிக்கப்படுகிறது.
எதிர்பார்ப்பு
பல முதலீட்டாளர்களும் தங்களது முதலீட்டினை வகைப்படுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், நீண்டகால முதலீடாக வகைப்படுத்த 3 ஆண்டுகள் என்பதை 2 ஆண்டுகளாக குறைக்கலாம். இது சில்லறை முதலீட்டாளர்களை அதிகரிக்க உதவும், வணிகத்தினையும் அதிகரிக்க உதவும்.
எஸ்டிடி & சிடிடி
மேலும் பங்கு சந்தையில் விதிக்கப்படும் எஸ் டிடி(stt) கட்டணமும், கமாடிட்டிகளுக்கு விதிக்கப்படும் ctt கட்டணமும் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இது கூடுதல் கட்டணமாகவே உள்ளது. ஆக இந்த பட்ஜெட்டில் இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகினால் நன்றாக இருக்கும் எனலாம்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications