இந்திய பங்குச்சந்தையில் பாதுகாப்பு துறை சார்ந்த பங்குகள் சமீப காலங்களில் பல மடங்கு லாபம் கொடுத்த போதிலும், கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்புத் துறை பங்குகள் 90% வரை உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதன் வாயிலாக, இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது, இந்திய பாதுகாப்பு துறையை சேர்ந்த நிறுவனங்களில் டாப் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.1.76 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதன் மூலம் இத்துறை முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஜூலை 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டை முன்னிட்டு, பொதுத்துறை கப்பல் கட்டுமான நிறுவனங்களான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் (GRSE) 90 சதவீதமும் மற்றும் மசகான் டாக் 73 சதவீதம் லாபத்தை பெற்று முதலிடத்தில் உள்ளன.
மோடி அரசின் பாதுகாப்பு துறையின் உள்நாட்டு உற்பத்தி ஊக்குவிப்புக் கொள்கையால், இத்துறை நிறுவனங்கள் அடுத்தடுத்து புதிய ஆர்டர்களை பெற்று வருகிறது. இதன் வாயிலாக புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அப்படி சமீபத்தில் அதிகப்படியான ஆர்டர்களை பெற்ப பராஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 63% உயர்ந்துள்ளன.
இதேபோல் கொச்சின் ஷிப்யார்டு (49%), BEML (28%), டேட்டா பேட்டர்ன்ஸ் (23%) மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் (12%) ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளன.
மேலும் ஒரு வருட காலகட்டத்தைப் பார்க்கும்போது, பாதுகாப்பு துறை நிறுவனம் மீதான முதலீடுகளில் கிடைக்கும் லாபம் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறது. கொச்சின் ஷிப்யார்டு பங்குகள் கடந்த ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 9 மடங்கு, GRSE 4 மடங்கு உயர்ந்துள்ளது, மற்ற பாதுகாப்பு துறை பங்குகள் குறைந்தது இரண்டு மடங்கு லாபத்தை கொடுத்துள்ளது.
சரியாக சொல்ல வேண்டுமெனில் மோடி அரசு 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தை தொடங்கியதில் இருந்தே பாதுகாப்பு துறையில் முதலீடு செய்தவர்கள் 10 மடங்கு லாபம் ஈட்டியுள்ளனர்.
பாதுகாப்பு துறைக்கு- உள்நாட்டு உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான அரசின் தொடர் முயற்சிகள் மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிப்பது ஆகிய இரட்டை வளர்ச்சி இன்ஜின்கள் கொண்டுள்ளதன் காரணமாக, பாதுகாப்பு துறை பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்படும் துறையாகப் பார்க்கப்படுகிறது.
ஜூலை 23 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், பாதுகாப்பு துறை பங்குகளில் முதலீடு மற்றும் மூலதன செலவினங்கள் உள்ளிட்ட அறிவிப்புகள் கட்டாயம் வெளியாகும் என கணிக்கப்படுவதால் இத்துறை பங்குகள் கடந்த சில மாதங்களாக பெரும் லாபத்தை அளித்து வருகிறது.
கடந்த ஒரு மாதத்தில் பாதுகாப்பு துறையில் அதிகம் லாபத்தைப் பதிவு செய்த டாப் 10 பங்குகளின் பட்டியல்
- GRSE - 90 சதவீத உயர்வு
- Mazagon Dock - 73 சதவீத உயர்வு
- Paras Defence - 63 சதவீத உயர்வு
- Cochin Shipyard - 49 சதவீத உயர்வு
- BEML - 28 சதவீத உயர்வு
- Data Patterns (India) - 23 சதவீத உயர்வு
- Bharat Dynamics - 17 சதவீத உயர்வு
- Bharat Electronics - 15 சதவீத உயர்வு
- Hindustan Aeronautics - 12 சதவீத உயர்வு
- Astra Microwave Products - 3 சதவீத உயர்வு
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications