மத்திய பட்ஜெட் தினத்தை ஒவ்வொரு நிதியாண்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் நாள் என்று தாராளமாக சொல்லலாம். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எதிர்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். அரசாங்கம் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பட்ஜெட் நாளில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் எல் அண்ட் டி 5 பங்குகளை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அந்த பங்குகள் இதோ..
எல் அண்ட் டி
மெதுவான ஆர்டர் வரத்து குறித்த கவலைகள் உள்கட்டமைப்புத் துறையில் வளர்ச்சி எதிர்பார்ப்புகளை பாதித்துள்ளன. இதன் காரணமாக எல் அண் டி உள்ளிட்ட பெரும்பாலான பங்குகளை பாதித்துள்ளது. அதேசமயம் எல் அண்ட் டி நிறுவனத்தின் வலுவான உள்கட்டமைப்பு ஆர்டர்கள் கணிசமான வளர்ச்சிக்கு நிலை நிறுத்துகின்றன. மும்பை பங்குச் சந்தையில் இன்று இப்பங்கின் விலை ரூ.3,567.20ஆக இருந்தது.

அல்ட்ராடெக் சிமெண்ட்
தேசிய உள்கட்டமைப்பு பைப்லைன்(என்ஐபி) பிரதம மந்திரி கதி சக்தி மற்றும் பாரத்மாலா பரியோஜனா போன்ற நடவடிக்கைகளால் மூலதன செலவினங்கள் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் உள்கட்டமைப்பு மேம்பாடு அடையும் மற்றும் மலிவு விலை வீட்டுவசதியையும் அதிகரிக்கும். சிமெண்ட் மீதான முன்மொழியப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு இந்த துறை மற்றும் இந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது. இன்று இப்பங்கின் விலை ரூ.11,503ல் நிறைவடைந்தது.
தெர்மாக்ஸ்
கடந்த பட்ஜெட்டில் மின்சார துறைக்கான ஒதுக்கீடு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. எதிர்வரும் பட்ஜெட்டிலும் இத்துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என எ திர்பார்க்கப்படுகிறது. கிளின் எனர்ஜி மற்றும் தொழில்துறை மின்சாரத்தில் கவனம் செலுத்தும் தெர்மாக்ஸ் நிறுவனம், உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும், நிலையான எரிசக்தியை நோக்கிய மாற்றத்தாலும் வளர்ச்சிக்கு தயாராக உள்ளது. கிளின் எனர்ஜியில் கவனம் செலுத்தும் நிறுவனமாக மாறுவதன் மூலம் பயனடைய வாய்ப்புள்ளது.இன்று இப்பங்கின் விலை ரூ.3,864.50ல் நிறைவடைந்தது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்
நவீனமயமாக்கல் மற்றும் உள்நாட்டுமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து, பாதுகாப்பு அமைச்சகம் 2025ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஆர்டர் வளர்ச்சி 50-52 சதவீதமாக இருந்தது. இந்த நிதியாண்டில் ரூ.60,000 கோடியை ஆர்டர் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. ஜிஇ போன்ற சர்வதேச நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி ஒப்பந்தங்கள், அதை ஒரு சிறந்த பாதுகாப்பு ஓஇஎம்-ஆக நிலைநிறுத்துகின்றன. இன்று இப்பங்கின் விலை ரூ.3,941.75ல் நிறைவடைந்தது.
வாரீ எனர்ஜிஸ்
2024ம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அரசாங்கத்தின் உந்துதல் நாட்டின் திறனை கணிசமாக அதிகரிக்க உதவியுள்ளது. வாரீ எனர்ஜிஸ் நிறுவனம் தனது சர்வதேச விரிவாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், ஹூஸ்டனில் 1.6 ஜிகாவாட் தொகுதி வசதியை நிறுவ திட்டமிட்டுள்ளது. இதுதவிர, இந்நிறுவனம் கிரீன் ஹைட்ரஜன் மற்றும் மின்சார வாகனத் துறைகளிலும் புதிய முயற்சிகளை கொண்டுள்ளது. இதனால் இந்நிறுவன பங்குக்கு முதலீட்டாளார்கள மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. பேட்டரி, சோலார் பேனல் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி உள்ளிட்ட வர்த்தகத்தில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.2,393.70ஆக இருந்தது. இன்று இப்பங்கின் விலை ரூ.2,393.70ல் நிறைவடைந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications