பிப்.1 மத்திய பட்ஜெட் தாக்கல்! இந்த 68 பங்குகளை கவனியுங்க - ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரை..!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் மத்திய பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. மத்திய பட்ஜெட்டில் குறிப்பாக உள்கட்டமைப்பு, மின் உற்பத்தி, நிதி மற்றும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், பங்கு தரகு நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனம், மத்திய பட்ஜெட்டால் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த வளர்ச்சி காண வாய்ப்புள்ள 68 நிறுவன பங்குகளை முன்வைத்துள்ளது.

நெடுஞ்சாலை, ரயில்வே மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு உள்ளிட்ட நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்புக்கு மத்திய அரசு கவனம் செலுத்தும் என்பதால், எதிர்வரும் பட்ஜெட் இந்த துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு மகத்தான வாய்ப்புகளை அளிக்கும்.

பிப்.1 மத்திய பட்ஜெட் தாக்கல்! இந்த 68 பங்குகளை கவனியுங்க - ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் பரிந்துரை..!

அந்த வகையில், எச்.ஜி. இன்ப்ரா, ஆர்ஐடிஇஎஸ், கேபிஐஎல், கேஇசி இன்டர்நேஷனல், ஜே குமார் இன்ப்ராபுரோஜெக்ட்ஸ், அலுவாலியா காண்ட்ரக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது.

உள்கட்டமைப்பு பணிகள் அதிகரித்தால் சிமெண்ட்டுக்கான தேவை அதிகரிக்கும் இதனால் சிமெண்ட் நிறுவனங்கள் பலன் அடையும். இதனால் அல்ட்ராடெக், அம்புஜா சிமெண்ட்ஸ், டால்மியா பாரத், ஜேகே சிமெண்ட், ஜேகே லெட்சுமி மற்றும் பிர்லா கார்ப் ஆகிய சிமெண்ட் நிறுவனங்கள் பலன் பெறும்.

ஜேஎஸ்டபுள்யூ எனர்ஜி, என்டிபிசி, என்எல்சி இந்தியா, டாடா பவர் ஆகிய மின் பயன்பாட்டு நிறுவனங்களும் மத்திய பட்ஜெட்டால் வளம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாரீ எனர்ஜிஸ், பிரீமியர் எனர்ஜிஸ், ஐனாக்ஸ் விண்ட் ஸ்கிப்பர் லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஜீனஸ் பவர் ஆகிய நிறுவனங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது.

எஸ்பிஐ, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கிரெடிட் ஆக்சஸ் கிராமீன், ப்யூஷன் எம்எஃப்ஐ, சாடின் கிரெடிட் கேர், ஸ்பந்தனா ஸ்பூர்டி, எஸ்பிஐ லைஃப், எச்டிஎஃப்சி லைஃப், ஐசிஐசிஐ புரு லைப், பிஎஃப்சி மற்றும் ஆர்இசி ஆகிய வங்கி மற்றும் நிதித்துறையை சேர்ந்த பங்குகள் பலன் அடையும்.

அமி ஆர்கானிக்ஸ், தனுகா அக்ரிடெக், நியோஜென் கெமிக்கல்ஸ் ஆகிய ரசாயன மற்றும் உரத்துறையை சேர்ந்த பங்குகள் மத்திய பட்ஜெட்டால் முன்னேற்றம் காணலாம். பிரஜ் இண்டஸ்ட்ரீஸ், வா டெக் வாபாக், கிராவிடா, ஆண்டனி வேஸ்ட் மற்றும் ஜெயின் இரிகேஷன் ஆகிய தொழில்துறை நிறுவனங்கள் வளர்ச்சி காணும்.

தாபர், பிரிட்டானியா, விபிஎல், விமார்ட், விஷால் மெகா மார்ட் ஆகிய எப்எம்சிஜி மற்றும் ரீடெயில் நிறுவனங்கள் புதிய வாய்ப்புகளை எதிர்கொள்ளும். வாகனம் மற்றும் அது சார்ந்த துறையை சேர்ந்த மாருதி சுசுகி இந்தியா, மகிந்திரா அண்ட் மகிந்திரா, டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், யுனோ மின்டா, எக்சைடு இண்டஸ்ட்ரீஸ், அமர ராஜா எனர்ஜி ஆகிய நிறுவன பங்குகள் ஆதாயம் அடையும்.

ரியல் எஸ்டேட் துறையின் பிரபலமான பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ், ஓபராய் ரியாலிட்டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் காணும். ஆனந்த் ராஜ் போன்ற டேட்டா சென்டரை மையமாக கொண்ட நிறுவனங்களுக்கு எதிர்வரும் பட்ஜெட் சாதகமாக இருக்கும். மருந்து துறையை பொறுத்தவரை டாக்டர் ரெட்டீஸ், லுப்பின் மற்றும் போர்ட்டிஸ் ஆகிய நிறுவனங்கள் வளர்ச்சி காணும். ஹோட்டல் மற்றும் சுற்றுலா துறையில் இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் மத்திய பட்ஜெட்டால் வளம் பெற வாய்ப்புள்ளது என்று ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+