பிப்ரவரி 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மத்திய பட்ஜெட் 2026 (Budget 2026) தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால் பங்குச்சந்தை முழுமையாக இயங்கியது. இந்த சிறப்பு வர்த்தக நாளில் இந்திய பங்குச் சந்தை பெரும் சரிவை சந்தித்தது, முதலீட்டாளர்கள் பெரும் இழப்பை எதிர்கொண்டனர். இந்த மோசமான சரிவுக்கு மிக முக்கியமான காரணம் STT உயர்வு குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்தது தான்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் செக்யூரிட்டீஸ் டிரான்சாக்ஷன் டேக்ஸ் (STT) கடுமையாக உயர்த்தியதால் முதலீட்டாளர்கள் பெரும் அளவில் பங்குகளை விற்பனை செய்தனர்.

பட்ஜெட்-ல் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்துக்கு STT 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன்ஸ் பிரீமியம் வர்த்தகத்துக்கு 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டது. பார்க்க சிறிய தொகையாக தோன்றலாம் ஆனால் அளவீல் பார்த்தால் 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்வாகும். இதனால் டெரிவேட்டிவ் சார்ந்த பங்குகள் மற்றும் துறைகளில் கடும் விற்பனை ஏற்பட்டது.
இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1546 புள்ளிகள் சரிந்து 80,723 புள்ளிகளிலும், நிஃப்டி 50 குறியீடு 24,825 புள்ளிகளிலும் முடிந்தன. நிஃப்டி 495 புள்ளிகள் (1.96 சதவீதம்) சரிந்தது. இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வரை சரிந்து 79,899.42 என்ற குறைந்த அளவை தொட்டது. இதேபோல் நிஃப்டி 24,572 என்ற உள்நாள் குறைந்த அளவை எட்டியது.
இந்த சரிவால் முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு ரூ.9,72,657.25 கோடி அதாவது கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான சரிவை சரிவை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம் சிறப்பு வர்த்தக அமர்வில் BSE பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.460 லட்சம் கோடியிலிருந்து ரூ.450 லட்சம் கோடியாக சரிந்தது. BSE பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் கோடி இழந்தது. இது ஒரு நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்றாகும்.
நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 2.4 சதவீதமும், நிஃப்டி ஸ்மால் கேப் 100 குறியீடு 2.7 சதவீதமும் சரிந்தன. இந்தியா VIX அளவீடு 12 சதவீதம் உயர்ந்தது முதலீட்டாளர்கள் மத்தியில் இருக்கும் பயத்தை காட்டியது.
துறை அடிப்படையில் பார்க்கும் போது நிஃப்டி PSU பேங்க் குறியீடு 5.57 சதவீதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. நிஃப்டி மெட்டல் 4.05 சதவீதம் இழந்தது. நிஃப்டி பேங்க் மற்றும் நிஃப்டி ஃபைனான்ஷியல் சர்வீசஸ் குறியீடுகள் 2.36 சதவீதத்திற்கு மேல் சரிந்தன.
பட்ஜெட் 2026இல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பயோபார்மா துறைக்கு ரூ.10,000 கோடி முதலீடு செய்ய அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய மருந்துத் துறையை பெரிதும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் எதிரொலியாக ஆன்தெம் பயோசயின்சஸ் பங்கு 6.49 சதவீதம் உயர்ந்தது. பயோகான் 2.93 சதவீதமும், சின்ஜீன் இன்டர்நேஷனல் 2.78 சதவீதமும், பனேசியா பயோடெக் 2.56 சதவீதமும் உயர்ந்தன. நாட்கோ பார்மா 1.63 சதவீதமும், கான்கார்ட் பயோடெக் 1.54 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் லேப் 1.37 சதவீதமும், க்ளாண்ட் பார்மா 1.10 சதவீதமும் உயர்ந்தன. இந்த உயர்வு BSE-யில் பதிவானது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications