இந்திய மக்கள் மிகவும் எதிர்பார்த்த மத்திய பட்ஜெட் 2026 (Budget 2026) தாக்கல் செய்யப்பட்ட உடன் பங்குச்சந்தையில் பொதுத்துறை வங்கி பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. பங்குச் சந்தை இயங்கிய நிலையில், பொதுத்துறை வங்கி குறியீடு 2% முதல் 6% வரை இழப்பை சந்தித்தது. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஞாயிற்றுக்கிழமை பங்குச்சந்தை பட்ஜெட் தாக்கல் காரணமாக திறக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இல்லாதது பெரும் இழப்பாக பார்க்கப்பட்டது. இதேவேளையில் STT உயர்த்தப்பட்டது மூலம் உள்நாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உதாரணமாக பேங்க் ஆஃப் இந்தியா பங்கு 8.4% சரிந்து பொதுத்துறை வங்கி குறியீட்டில் மிகப்பெரிய இழப்பை பதிவு செய்த நிறுவனமாக மாறியுள்ளது. இந்தியன் பேங்க், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பேங்க் ஆஃப் பரோடா ஆகியவை 6% முதல் 7% வரை இழந்துள்ளன. பொதுத்துறை வங்கி குறியீட்டில் உள்ள மற்ற பங்குகளும் 2% முதல் 5% வரை சரிவை சந்தித்துள்ளன.
பட்ஜெட் 2026-27இல் மத்திய அரசு சந்தையிலிருந்து ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகம் என்பதால் முதலீட்டாளர்கள் வங்கி பங்குகளை விற்பனை செய்தனர். எதற்காக விற்பனை செய்தனர்.
மொத்த சந்தை கடன் ரூ.16.3 லட்சம் கோடியாக மதிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 2027ஆம் நிதியாண்டில் வட்டி செலுத்துதல் தவிர்த்த நிகர கடன் ரூ.11.7 லட்சம் கோடியாக உள்ளது.
மத்திய அரசு அதிக கடன் வாங்குவதால் பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாபம் (bond yields) உயர்த்தும். இது பொதுத்துறை வங்கிகளுக்கு எதிர்மறையானது. பத்திர முதலீட்டில் லாபம் உயர்ந்தால் வங்கிகளின் மார்க்-டு-மார்க்கெட் போர்ட்ஃபோலியோவில் கருவூல இழப்பு ஏற்படும். இதுவே பங்கு விற்பனைக்கு முக்கிய காரணம்.
இன்று பத்திர சந்தை மூடப்பட்டுள்ளது. பங்குச் சந்தை மட்டும் இயங்கியது. நாணய சந்தை திங்கள்கிழமை தொடங்கும் என்பதால் பெரும் சரிவை பதிவு செய்யும். மேலும் நாளை வெளிநாட்டு நாணய முதலீட்டாளர்களும் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுத்துறை வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்கள் இழப்பை சந்திக்கின்றனர்.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 1546.84 புள்ளிகள் சரிந்து பெரும் இழப்பை எதிர்கொண்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 495.20 புள்ளிகள் சரிந்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications