இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்திய பங்கு சந்தைப் பெரிய மாற்றம் ஏதும் இல்லாமல் சரிவுடன் வர்த்தகத்தினை முடித்துக்கொண்டது.
10 சதவீத LTCG வரி விதிப்பு குறித்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்தது.
மறுபக்கம் அமெரிக்க ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததால் இந்திய மற்றும் ஆசிய பங்கு சந்தைகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை.
இன்றைய நிலவரம்
இன்றைய சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 0.16 சதவீதம் என 58.36 புள்ளிகள் சரிந்து 35,906.66 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்டி 0.10 சதவீதம் என 10.50 புள்ளிகள் சரிந்து 11,016.90 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
துறை சார்ந்த அறிக்கை
ஆட்டோ மொபைல், வங்கி துறை, ஐடி துறை, துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் இன்று லாபம் அளித்துள்ளன. அதே நேரம் எண்ணெய் நிறுவனங்கள், பார்மா, உள்ளிட்ட துறை சார்ந்த பங்குகள் நட்டம் அளித்துள்ளன.
லாபம் அளித்த பங்குகள்
மகேந்திரா & மகேந்திரா (+ 4.44%), எல்&டி (+ 2.77%), இண்டஸ் இண்டு பாங்க் (+2.44%), பஜாஜ் ஆட்டோ (+ 2.13%), ஏசிய பெயிண்ட்ஸ் (+ 1.89%), ஐடிசி (+1.15%)
நட்டம் அளித்த பங்குகள்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (-2.04%), ஐசிஐசிஐ வங்கி (-2.04%), டாக்ட்டர் ரெட்டிஸ் (-3.07%), சன் பார்மா (-3.99%), ஓஎஞ்ஜிசி (-4.06%)
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications