மோதிலால் ஆஸ்வால் பைனான்ஷியல் சர்வீசஸ் நிறுவனம் வேதாந்த் பேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. அதன் இலக்கு விலை 1400 ரூபாயாக வைத்துள்ளது. இதன் விலை தற்போதைய விலையில் இருந்து 27% வரையில் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒரு பிரத்யேக சில்லறை விற்பனையாகலாம். இது பல்வேறு பிராண்டுகளை வழங்கி வருகின்றது.குறிப்பாக விழாக்கால பண்டிகளுக்கு ஏற்ப பல்வேறு உடைகளுடன் வலம் வருகின்றது.
பல பிராண்டுகள்
வேதாந்த் நிறுவனம் மான்யவர், மோஹே மற்றும் மெபாஸ் என்ற பிராண்ட் பெயரில் சந்தைபடுத்துகிறது. இதன் சந்தை மதிப்பு 26,808.63 கோடி ரூபாயாக உள்ளது. இது ஒரு மிட் கேப் நிறுவனம் ஆகும்.
இதன் 52 வார உச்ச விலை 6 அக்டோபர் 2022ல் 1501.22 ரூபாயாக இருந்தது. இதே 52 வார குறைந்தபட்ச விலை 888.70 ரூபாயாகவும் தொட்டது.
பங்கு விலை வரலாறு
இப்பங்கின் விலை கடந்த 1 வாரம் 1.91% சரிவிலும், கடந்த 1 மாதத்தில் 8.25% சரிவிலும், கடந்த 3 மாதத்தில் 16.4% சரிவிலும், கடந்த 6 மாதத்தில் 21.62% சரிவிலும், கடந்த 1 ஆண்டில் 17% மேலாக ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
இதே இப்பங்கு பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நாளில் இருந்து 18.3% ஏற்றத்திலும் காணப்படுகின்றது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கி
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸ் துணை தலைவர் அனுஜ் குப்தா அறிக்கையின் படி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி மற்றும் ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகளை பரிந்துரை செய்துள்ளார்.
இதில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள நிலையில், அதன் இலக்கு விலை 1620 ரூபாயாகவும், இதன் ஸ்டாப் லாஸ் 1565 ரூபாயாகவும் கணித்துள்ளார். இதன் இலக்கு விலை 1620 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளார்.
ஓ.என்.ஜி.சி
ஓ.என்.ஜி.சி பங்கினை பொறுத்தவரையில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ள தரகு நிறுவனம், அதன் இலக்கு விலையினை 160 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 142 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல்
ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் நிறுவனத்தினையும் தற்போதைய சந்தை விலையில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளார். இதன் இலக்கு விலையாக 710 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ள நிலையில், ஸ்டாப் லாஸ் ஆக 654 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர்.
முக்கிய காரணிகள்
இந்திய பங்கு சந்தையில் வரவிருக்கும் நாட்களில் ஏற்ற இறக்கம் என்பது இருக்கலாம். மேலும் அமெரிக்க மத்திய வங்கியின் முக்கிய முடிவுகள், அமெரிக்க வங்கிகளில் நிலவி வரும் நெருக்கடி என பல பிரச்சனைகளுக்கு மத்தியில் சந்தையில் அதன் தாக்கம் இருக்கலாம். ஆக வரவிருக்கும் நாட்களிலும் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக இருக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் இருப்பது நல்லது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications