இந்த பங்கு விலை 35% அதிகரிக்கலாம்.. நீங்க வாங்கி இருக்கீங்களா.. நிபுணர்கள் பலே கணிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி எரிவாயு சப்ளையரான குஜராத் கேஸ் லிமிடெட் நிறுவனமானது, இந்தியாவில் 6 மாநிலங்களில் 27 நகர எரிவாயு சப்ளையர் (City Gas Distribution) பதிவினை கொண்டுள்ளது.

 

குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்களில், 43 மாவட்டங்கள், 1 யூனியன் பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் சப்ளை செய்து வருகின்றது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 35 சதவிகிதம் அதிகரிக்கலாம் என, தரகு நிறுவனமான மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் கணித்துள்ளது. இது தற்போது 630 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகிறது.

5 நாளில் 20 லட்சம் போன் விற்பனை.. வியக்க வைக்கும் சியோமி..!

வருவாய் அதிகரிக்கலாம்

வருவாய் அதிகரிக்கலாம்

இந்த நிறுவனத்தின் லாபம் வரவிருக்கும் ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என்றும், இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் தற்போது கேஸ் விலையும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்த நிறுவனத்தின் வருவாய் என தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதன் தாக்கம் அதன் வருவாயிலும் எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது

தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது

தற்போது நாட்டில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வளர்ச்சி விகிதமானது அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தேவையானது அதிகரித்து வருகிறது. குறிப்பாக எரிவாயு தேவையானது தற்போது மீண்டு வந்து கொண்டுள்ளது. இதனை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக மின்சாரப் பற்றாக் குறையினால், எரிபொருட்கள் தேவையானது இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்
 

எரிபொருள் விலை அதிகரிக்கலாம்

இதனால் நீண்டகால நோக்கில் எரிபொருட்கள் விலையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் குஜராத் நிறுவனத்தின் லாபமானது எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வருவாயானது 2022ம் நிதியாண்டில், 124.9 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கலாம். இதே 2023ம் நிதியாண்டில் 187 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

லாப விகிதம் அதிகரிக்கலாம்

லாப விகிதம் அதிகரிக்கலாம்

இதே லாப விகிதமானது 2022ம் நிதியாண்டில் 13.8 கோடி ரூபாயும், 2023ம் நிதியாண்டில் 19.7 கோடி ரூபாயாகவும் அதிகரிக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதே இபிஎஸ் விகிதமானது ஆண்டுகளில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். 2022ம் நிதியாண்டில் 20 ரூபாயும், 2023ம் நிதியாண்டில் 28.6 ரூபாயாகவும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்கு இலக்கு விலை

பங்கு இலக்கு விலை

இந்த நிறுவனம் தொடர்ந்து கேஸ் சப்ளையில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் நிலையில், இதற்கு நல்ல எதிர்காலமும் காத்துக் கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்கிடையில் தான் இந்த பங்கின் இலக்கு விலையையும் 850 ரூபாயாக நிர்ணயித்துள்ளனர்.

*இந்த பங்கினை தரகு நிறுவனங்கள் பரிந்துரை செய்திருந்தாலும், இறுதி முடிவினை நீங்கள் அலசி ஆராய்ந்து, நம்பிக்கையான ஆலோசகரிடம் விவாதித்து, அதன் பின்னர் வாங்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: stock recommendation
English summary

Buy this Gas stock; it can gain 35% from current levels

Gujarat gas ltd recommended to buy by motilal oswal, target price Rs.850.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X