இந்த ஐடி பங்கினை வாங்கி போடலாம்... ஷேர்கானின் பலே பரிந்துரை..!

ஐடி துறையினை சார்ந்த முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் பங்கினை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் கணித்துள்ளது.

இதன் தற்போதைய விலை நிலவரம் 3,570 ரூபாயாகும். இந்த பங்கின் விலையானது 4,400 ரூபாயினை தொடலாம் என ஷேர்கான் நிறுவனம் கணித்துள்ளது. இது கிட்டதட்ட 23% ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேர்கான் நிறுவனத்தின் அறிக்கையின் படி, டிசிஎஸ் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி விகிதமானது வலுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

நாட்டில் கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல் தேவையானது பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதனால் ஐடி துறையில் வளர்ச்சி விகிதமானது எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, டிஜிட்டல் தேவையால் ஒப்பந்தம் அதிகரிப்பு, முதலீடுகள் அதிகரிப்பு என பல காரணிகளினால் வளர்ச்சி விகிதமானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய ஒப்பந்தங்கள்

மிகப்பெரிய ஒப்பந்தங்கள்

குறிப்பாக நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், டிஜிட்டல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையினை அளித்து வருகின்றது. ஐடி துறையில் முன்னணி நிறுவனமாகவும் வளர்ச்சி கண்டு வருகின்றது. டிசிஎஸ் நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாகவே மிகப்பெரிய ஒப்பந்தங்களை செய்து வருகின்றது.

எவ்வளவு வளர்ச்சி

எவ்வளவு வளர்ச்சி

இது மேற்கொண்டு இந்த நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூன்றாவது காலாண்டில் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் வலுவான தேவையானது மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், 2022ம் நிதியாண்டின் பாதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 16% வளர்ச்சியினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 வாய்ப்புகள் அதிகம்

வாய்ப்புகள் அதிகம்

தற்போது பெரியளவிலான ஒப்பந்தங்கள் பதிவாகியுள்ள நிலையில், ஊழியர்கள் எண்ணிக்கையானது அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வரவிருக்கும் காலாண்டுகளில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாட்டில் ஒமிக்ரான் அச்சம் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் தேவையானது இன்னும் அதிகரிக்கவே வாய்ப்புகள் எனலாம்.

இண்றைய நிலவரம் என்ன?

இண்றைய நிலவரம் என்ன?

டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது என் எஸ் இ-யில் கிட்டதட்ட 1% குறைந்து, 3556.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இன்றைய அதிகபட்ச விலை 3606 ரூபாயாகவும், இன்றைய குறைந்தபட்ச விலையானது 3510.15 ரூபாயாகவும் உள்ளது.

இதே பி.எஸ்.இயில் இந்த பங்கின் விலையானது 0.84% குறைந்து, 3557.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்ச விலை 3605 ரூபாயாகும். இன்றைய குறைந்த விலை 3509.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

****Disclaimer: இந்த பங்கினை தரகு நிறுவனம் பரிந்துரை செய்திருந்தாலும், இதனை வாங்கும் முன்பு முழுமையாக தெரிந்து கொண்டு அதன் பிறகு நீங்கள் இறுதியாக முடிவெடுக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+