மங்களூரூ, கர்நாடகா: முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகன் CCD Founder V G Siddhaartha நேற்று (ஜூலை 29, 2019) மாலையில் இருந்து காணவில்லை.
கடைசியாக CCD Founder V G Siddhaartha-வை பார்த்த கார் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் தொடங்கி அவர் செல்போனில் பேசியவர்கள், நேரடியாகச் சென்று பேசியவர்கள் என பலரிடமும் கர்நாடக காவல் துறை துருவி துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

CCD என இளசுகளால் செல்லமாக அழைக்கப்பட்ட Cafe Coffee Day தான் இந்தியாவின் மிகப் பெரிய காபி செயின் கடை. இந்த CCD Founder V G Siddhaartha தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய காபி எஸ்டேட்டையும் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இப்போது காபி டே நிறுவனம் தன் அன்றாட பணிகளைச் செய்ய ஒரு புதிய தலைவர் குழுவை அமைத்துச் செயல்படப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
காபி டே நிறுவனம் இன்று (ஜூலை 30, 2019) இந்திய பங்குச் சந்தைகளான தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகியவர்களிடம் முறையாக கடிதம் வழியாக இந்த தலைமை வெற்றிடம் தொடர்பாக சில விஷயங்களைத் தெரியப்படுத்தி இருக்கிறார்கள்.
அந்தக் கடிதத்தில் "நேற்று மாலை முதல், காபி டே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான திருமிகு வி ஜி சித்தார்த்தா அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதற்கு தேவையான உதவிகளை அதிகாரிகளிடம் கோரி இருக்கிறோம். இப்போது காபி டே நிறுவனத்தை, ஒரு தலைமைக் குழு, தடையின்றி தொழிலை ப்ரொஃபெஷனலாக நிர்வகித்தும், தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்கிறது. இந்த தலைமைக் குழு காபி டே நிறுவனத்தின் அன்றாட வியாபாரத்தையும், அதன் செயல்பாடுகளையும் உறுதிப்படுத்தும். மேற்கொண்டு வி ஜி சித்தார்த்தா தொடர்பாக கிடைக்கும் செய்திகளை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்" எனக் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
இந்தக் கடிதத்தை காபி டே நிறுவனத்தின் நிறுவன செயலர் (Company Secretary) சதானந்த பூஜாரி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்திருக்கிறார். இன்று காலை முதல் பங்கு விலை சுமார் 20 சதவிகிதம் இறக்கத்திலேயே வர்த்தகமாகி வந்திருக்கிறது காபி டே பங்குகள். அதை நிலை பெறச் செய்யும் நடவடிக்கையாகக் கூட இந்த கடிதத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள் பங்குச் சந்தை அனலிஸ்டுகள்.


Click it and Unblock the Notifications