வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனம் கேபிட்டல் இந்தியா பைனான்ஸ். இந்நிறுவனம் அன்னிய செலாவணி பரிமாற்ற சேவைகள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
மேலும், இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இதனால் இந்நிறுவன பங்கின் மீது முதலீட்டாளர்களுக்கு எப்போதும் கவனம் இருக்கும். தற்போது இந்நிறுவனம் முதல் முறையாக பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

ஸ்மால்கேப் பங்கான கேபிட்டல் இந்தியா பைனான்ஸ் நிறுவனம் தனது பங்கு பிரிப்பு விகிதம் மற்றும் அதற்கான பதிவு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி, இந்நிறுவனம் தனது பங்குகளை 5:1 என்ற விகிதத்தில் பங்குகளை பிரிக்க உள்ளது.
அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.2 முகமதிப்பு கொண்ட 5 பங்குகளாக பிரிக்கப்பட உள்ளது. பங்கு பிரிப்பு நடைமுறைக்கு வந்தவுடன், பங்கின் விலையும் பிரிவின் விகிதத்தில் சரிசெய்யப்படும். தற்போது இப்பங்கின் விலை ரூ.170 என்ற அளவில் உள்ளது.
கேபிட்டல் பைனான்ஸ் இந்தியா நிறுவனம் தனது பங்கு பிரிப்புக்கு தகுதியான நிறுவனத்தின் ஈக்விட்டி பங்குதாரர்களின் உரிமையை தீர்மானிப்பதற்கான பதிவு தேதியாக பிப்ரவரி 17ம் தேதியை நிர்ணயம் செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை சுமார் 4 சதவீதத்துக்கு மேல் குறைந்து ரூ.166க்கு வீழ்ந்தது. 2024 அக்டோபர் 16ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.278.40ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஒராண்டில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 22 சதவீதம் ஆதாயம் கொடுத்துள்ளது. அதேசமயம் கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே கேபிட்டல் இந்தியா பைனான்ஸ் நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,302 கோடியாக இருந்தது.
Story written by: Subramanian
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications