2020ல் தொடங்கப்பட்ட செல்லெகோர் கேஜெட்ஸ் நிறுவனம் மின்னணு மற்றும் நுகர்வோர் சாதன பொருட்களின் கொள்முதல், பிராண்டிங் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகிறது. 2023 செப்டம்பரில் இந்நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்கியது. ஒரு பங்கு ரூ.92 என்ற விலையில் பங்குகளை வெளியிட்டது. முதலீட்டாளர்கள் மத்தியில் இந்நிறுவன பங்குக்கு நல்ல வரவேற்பு இருந்தது மற்றும் பங்குகள் பட்டியலிடப்பட்டபோது மல்டிபேக்கர் வருமானத்தை ஈட்டியதால் இந்நிறுவனத்தின் ஐபிஓ மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 10:1 என்ற விகிதத்தில் பங்கு பிரிப்பை மேற்கொள்வதாக அறிவித்தது.

அதாவது ரூ.10 முக மதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளை பிரிப்பதாகும். பங்குச் சந்தை அமைப்பின் தகவலின்படி, கடந்த ஓராண்டில் இப்பங்கு 111 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.1,411 கோடியாகும்.
தற்போது செல்லெகோர் கேஜெட்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிட அதன் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட முறையில், ரூ.10,10,00,000 திரட்டுவதற்காக தலா ரூ.1 லட்சம் முகமதிப்புள்ள 1010 சீரீஸ் ஆர்எக்ஸ்5 பட்டியலிடப்படாத, செக்யூர்டு, பகுதி செலுத்தப்பட்ட மற்றும் மீட்டெடுக்கக்கூடிய பங்குகளாக மாற்ற முடியாத கடன்பத்திரங்களை வெளியிடுவதற்கு நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அதில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுவாக நிறுவனங்கள் தனது நீண்ட முதலீட்டு தேவைக்காக கடன் பத்திரங்களை வெளியிட்டு மூலதனத்தை திரட்டும். பங்குகளாக மாற்றக்கூடிய கடன் பத்திரங்களை காட்டிலும் பங்குகளாக மாற்ற முடியாத கடன்பத்திரங்களுக்கு நிறுவனங்கள் அதிக வட்டி வழங்கும், தேசிய பங்குச் சந்தையில் இன்று செல்லெகோர் கேஜெட்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்த காட்டிலும் 3.338 சதவீதம் குறைந்து ரூ.60.05ல் முடிவுற்றது.
2024 அக்டோபர் 29ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் பங்குகளில் 49.64 சதவீதம் புரோாட்டர்கள் வசம் உள்ளது. அதேசமயம், பொதுமக்கள் வசம் 50.36 சதவீத பங்குகள் உள்ளன.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications