மும்பை: ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் எனப்படும் ஸ்மால் கேப் நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித் தந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஸ்மால் கேப் நிறுவனமான ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 35% மற்றும் 2 ஆண்டு காலத்தில் 80% உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு இந்த நிறுவனத்தின் பங்கு 282% லாபத்தை தந்துள்ளது.

ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 5 ஆண்டு காலத்தில் 1407% லாபத்தையும், 10 ஆண்டுகளில் 3920% லாபத்தையும் பெற்று தந்துள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு ரூ.150, 52 வார கால அதிகபட்ச மதிப்பு ரூ.276 ஆகும். இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.3,665.26 கோடியாக இருக்கிறது. புதன்கிழமை வர்த்தக முடிவில் 2.47 சதவீத சரிவுடன் 209.10 ரூபாய் அளவில் உள்ளது.
சண்டிகரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஜேடிஎல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தங்களுக்கு இருந்த ரூ. 36 கோடி கடனை திரும்ப செலுத்தியதன் மூலம் கடனே இல்லாத நிறுவனமாக மாறியிருக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டீல் பைப்புகள் மற்றும் ட்யூபுகளை உற்பத்தி செய்து வழங்குகிறது.
இந்த நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் பஞ்சாப், மகாராஷ்ட்ரா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. ஒரு ஆண்டுக்கு 5 லட்சத்து 86 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யும் வகையில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
அண்மையில் இந்த நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த ஆவணத்தில் இதுவரை இல்லாத அளவாக தங்களது விற்பனையானது 3 லட்சத்து 41 ஆயிரத்து 846 மெட்ரிக் டன் என்ற உச்சத்தை எட்டி இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் விற்பனை விகிதமானது 42.25% அதிகரித்துள்ளது. அதேபோல இந்த நிறுவனத்தின் புக் வேல்யூ என்பது 28.45 ஆகவும், பேஸ் வேல்யூ 2 ஆகவும் இருக்கிறது.
நிறுவனத்தின் வருவாய் 2023இல் ரூ. 155 கோடி ஆகும். நிறுவனத்தின் வருவாய் ரூ.1,555, நிகர லாபம் ரூ.90 கோடியாக உள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீ மதன் சிங்கிளா என்பவரால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. இதன் பங்குகளில் 54.13% புரமோட்டர்களிடமும், 41.14% சில்லறை முதலீட்டாளர்களிடமும், 4.62% வெளிநாட்டு நிறுவனங்களிடமும் உள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications