வெள்ளிக்கிழமை நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான சீனாவின் யூவான் மதிப்பு ஒரே நாளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 0.92 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் முக்கிய நாணயங்களின் மதிப்புகள் குறைந்த காரணத்தினால் சீன யூவான், இன்று காலையில் நாணய சந்தை வர்த்தகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது, இதன் எதிரொலியாக 2005ஆம் ஆண்டுக்குப் பின் மிகப்பெரிய உயர்வைச் சந்தித்துள்ளது யூவான்.

வியாழக்கிழமை வர்த்தகம் ஐரோப்பா மற்றும் வால் ஸ்ட்ரீட் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலம் ஆசிய சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவானது. ஆயினும் சாம்சங் நிறுவனத்தின் 50 சதவீத லாப உயர்வால் இந்நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டது. மேலும் டோயோட்டா நிறுவனம் மெக்சிக்கோவில் அமைக்க உள்ள புதிய தொழிற்சாலைக்கு அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் எதிர்ப்பு இந்நிறுவனப் பங்குகளைச் சரிவில் தள்ளியது.
சீனாவில் மத்திய வங்கியான பாங்க் ஆஃப் சீன நாட்டின் வளர்ச்சிக்காக நிலை தன்மையைக் கொண்டு வர அமெரிக்க டாலருக்கு எதிரான சீன நாணயத்தின் மதிப்பை 6.8668 என்ற நிலையில் நிர்ணயம் செய்து வைத்துள்ளது நிலையில்.

வெள்ளிக்கிழமை வர்த்தகத் துவக்கத்தில் 8 வருடமாக நிலையான வர்த்தகத்தில் இருந்த சீன நாணயம் 0.92 சதவீதம் உயர்ந்து 7.0 யூவானாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்திய ரூபாய்க்கு எதிரான சீன யூவான் மதிப்பு 9.82 ரூபாய் உள்ளது.
நாணய மதிப்பீடு மற்றும் நாணய பரிமாற்றங்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் பெற இதைக் கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications