கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட பழமையான வங்கிகளில் ஒன்றான சிட்டி யூனியன் வங்கி நடப்பு நிதியாண்டிற்கான இரண்டாவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. அதில் நிறுவனத்தின் லாபம் ரூ.285 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.சென்ற நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 280.60 கோடி ரூபாயாக இருந்த நிகர லாபம், தற்போது 1.60 சதவீதம் அதிகரித்து, 285.20 கோடி ரூபாயாகி உள்ளது.
சிட்டி யூனியன் வங்கி பங்குதாரர்களுக்கு இன்று பணமழை பொழிந்துள்ளது. இன்றைய வர்த்தக அமர்வில், இந்த வங்கியின் பங்குகள் 14 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டின் செப்டம்பரில் முடிவடைந்த காலாண்டில் வங்கி நல்ல நிதி முடிவுகளை அறிவித்துள்ளதால், வங்கியின் பங்கில் மிகப்பெரிய ஏற்றம் காணப்படுகிறது. மறுபுறம், வங்கியின் பங்கு அதன் பங்குதாரர்களுக்கு கடந்த ஆண்டில் 32 சதவீத லாபத்தை அளித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த 2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டிற்கான நிதி முடிவுகளை வங்கி அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கியின் வரிக்குப் பிந்தைய லாபம் 1.6 சதவீதம் அதிகரித்து ரூ. 285 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அது ரூ. 281 கோடி. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருமானம் 8.2 சதவீதம் அதிகரித்து ரூ. 582 கோடி பதிவு செய்யப்பட்டது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 538 கோடியாக ஆக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு, 3.88 சதவீதத்தில் இருந்து 3.54 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் அளவு 1.87 சதவீதத்தில் இருந்து 1.62 சதவீதமாகவும் குறைந்துள்ளது. கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் மற்றும் சிறப்பாக கடன் அபாயங்களை கையாண்டது ஆகியவற்றால், இந்த காலாண்டு முடிவுகள் சிறப்பாக அமைந்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக அமர்வில், சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் பங்கு விலை 14 சதவீதம் அதிகரித்து ரூ. 171.84 ஆக வர்த்தகமாகிறது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 176.82 ஆகவும், 52 வாரங்களில் குறைந்தபட்ச அளவாக ரூ. 125.40 ஆகவும் உள்ளது.
பங்கு விலை கடந்த ஒரு வாரத்தில் சுமார் 11 சதவீதமும், கடந்த மாதத்தில் சுமார் 1 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் சுமார் 10 சதவீதமும், கடந்த ஆண்டில் சுமார் 32 சதவீதமும், கடந்த ஐந்தாண்டுகளில் 18 சதவீதமும் உயர்ந்துள்ளது. தற்போது இந்த வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 12,720 கோடியாக உள்ளது.
சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் நாட்டின் பழமையான தனியார் வங்கிகளில் ஒன்றாகும். இது முன்பு கும்பகோணம் வங்கி லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. தற்போது இந்த வங்கிக்கு நாடு முழுவதும் 774 கிளைகள் மற்றும் 1762 ஏடிஎம்கள் உள்ளன. இந்த வங்கி அக்டோபர் 31, 1904 இல் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த வங்கியில் ஜூன் 2024 வரையில் மொத்தம் 7188 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications