பட்ஜெட் மீதான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இந்திய சந்தைகள் தொடர்ந்து உச்சத்தினை தொட்டு வருகின்றன. குறிப்பாக நேற்று வர்த்தக நேர முடிவில் சுமார் 2,300 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்டது. இதற்கிடையில் இன்று கிட்டதட்ட 1200 புள்ளிகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

இன்று காலை தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கிய சந்தைகள், முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 1197.11 புள்ளிகள் அதிகரித்து, 49,797.72 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 366.65 புள்ளிகள் அதிகரித்து, 14,647.85 புள்ளிகள் ஆகவும் முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1727 பங்குகள் ஏற்றத்திலும், இதே 1165 பங்குகள் சரிவிலும், இதே 170 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இதற்கிடையில் நிஃப்டி, பிஎஸ்இ குறியீடுகளில் அனைத்தும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது.
குறிப்பாக நிஃப்டி 2.5% ஏற்றத்திலும், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 7% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இதே போல பேங்க் நிஃப்டியும் 3% மேலாகவும், இதே கடந்த இரண்டு வர்த்தக அமர்வில் 11% மேலாகவும் காணப்படுகிறது. எனினும் நிஃப்டி ஆட்டோ, நிஃப்டி பொதுத்துறை வங்கிகள் குறியீடு, பேங்க் நிஃப்டி, நிஃப்டி மீடியா, நிஃப்டி ரியால்டி உள்ளிட்ட குறியீடுகள் 3% மேலும், நிஃப்டி ஐடி, பார்மா, பைனான்ஷியல் சர்வீசஸ், தனியார் வங்கிகள் 2% மேலும் ஏற்றம் கண்டுள்ளன.
குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் டாடா மோட்டார்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், யுபிஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹெச்டிஎஃப்சி லைஃப், பஜாஜ் பின்செர்வ், ஹீரோ மோட்டோகார்ப், டைட்டன் நிறுவனம், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, லார்சன், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே பஜாஜ் பின்செர்வ், டைட்டன் நிறுவனம், ஹெச்யுஎல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சர்வதேச சந்தைகள் இரண்டாவது நாளாக ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், அதன் எதிரொலியும் இந்திய சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது. கூடுதலாக பட்ஜெட் அறிவிப்புகளும் சந்தையில் எதிரொலித்துள்ளது. இதனால் இந்திய சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக பலமான ஏற்றம் கண்டு வருகின்றது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications