இந்திய ஐடி துறைக்கு இந்த ஆண்டு பங்குச்சந்தையிலும் சரி, வர்த்தகத்திலும் சரி பெரும் பாதிப்பை ஏஐ தொழில்நுட்பம் மூலம் எதிர்கொண்டது. ஆனால் கடந்த ஒரு மாதமாக ஏஐ தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஐடி சேவை நிறுவனங்கள் தான் ஏணிப்படிகளாக இருப்பார்கள் என்ற கருத்து பெருவாரியாக நிலவிய காரணத்தால் ஐடி நிறுவன பங்குகள் உயர்ந்தது.
தற்போது CLSA என்னும் சர்வதேச முதலீட்டு நிறுவனம் இந்தியாவின் பல ஐடி சேவை நிறுவன பங்குகளுக்கு ரேட்டிங் குறைத்தது, டார்கெட் விலையையும் குறைத்து பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதனால் ஏஐ தொழில்நுட்ப தாக்கத்தில் இருந்து இந்திய ஐடி சேவை துறை இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது மீண்டும் மீண்டும் உணர்த்துகிறது.

CLSA நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மிகவும் கலவையாக இருந்தது. இதன் மூலம் 2030ஆம் நிதியாண்டுக்குள் இந்திய ஐடி நிறுவனங்களில் டாலர் வருவாய் வளர்ச்சி என்பது 5-7 சதவீத்திற்குள் குறைந்துவிடும்.
இதற்கு முக்கிய காரணம் ஏஐ பயன்பாடு அதிகம் என்பதால் சேவையின் கட்டணம் குறைந்து வருவாய் இழப்புக்கு இந்திய ஐடி நிறுவனங்களை கொண்டு செல்லும் என CLSA நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியாக வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருப்பதை அடிப்படையாக கொண்டு CLSA நிறுவனம் டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனத்தின் ரேட்டிங்-ஐ Hold ஆக குறைத்துள்ளது. இதேபோல்ல விப்ரோ, Mphasis ஆகியவற்றின் ரேட்டிங்-ஐ Underperform ஆக குறைத்துள்ளது.
டார்கெட் விலையை பார்க்கும் போது, CLSA நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இன்போசிஸ் ரேட்டிங்-ஐ குறைத்தாலும் டார்கெட் விலையை உயர்த்தியுள்ளது. இதன் படி தனது பழைய டார்கெட் விலையான 1109 ரூபாயில் இருந்து 1147 ஆக உயர்த்தியுள்ளது.
இதேபோல் டிசிஎஸ் டார்கெட் விலையை 2165 ரூபாயில் இருந்து 2326 ரூபாயாக அறிவித்துள்ளது. டெக் மஹிந்திரா பங்குகளின் டார்கெட் விலையை 1634 ரூபாயாக உயர்த்தியுள்ளது.
முக்கியமாக விப்ரோவில் டார்கெட் விலையை 157 ரூபாயில் இருந்து 152 ரூபாயாக குறைத்துள்ளது CLSA நிறுவனம். இது தற்போதைய 178 ரூபாய் விலையில் இருந்து சுமார் 15 சதவீதம் குறைவான அளவாகும். மேலும் Mphasis பங்குகளின் டார்கெட் விலையை தற்போதை விலையை காட்டிலும் 13 சதவீதம் குறைந்து 2113 ரூபாயாக குறைத்துள்ளது.
மறுப்புறம் CLSA நிறுவனம் மிட் லெவல் ஐடி நிறுவனங்கள் மீது பெரும் நம்பிக்கையை வைத்து அதன் ரேட்டிங்-ஐ பெரிய அளவில் உயர்த்தியுள்ளது. இதில் முக்கியமாக கோபோர்ஜ், பெர்சிஸ்டென்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு High Conviction Outperform ரேட்டிங் கொடுத்துள்ளது. அடுத்தாக எல்டிஐ மைண்டுட்ரீ மற்றும் ஹெக்சாவேர் டெக்னாலஜிஸ் பங்குகளுக்கு Outperform ரேட்டிங் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
