சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பிஎஸ்இ 100 இன்டெக்ஸில் இந்நிறுவன பங்கு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வரும் நிறுவனமாகும். இருப்பினும் கடந்த 6 மாதங்களாக இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை இரட்டிப்பாகலாம் என்று தரகு நிறுவனமான சிஎல்எஸ்ஏ தெரிவித்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. சிஎல்எஸ்ஏ, இந்நிறுவன பங்குக்கு "outperform" ரேட்டிங் கொடுத்துள்ளது.

சிஎல்எஸ்ஏ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிய பொருளாதார கவலைகள்,அமெரிக்காவின் வரி அபாயங்கள் மற்றும் மதிப்பீட்டு சரிவு போன்ற காரணங்களால் கடந்த 6 மாதங்களில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் கிட்டத்தட்ட 35 சதவீதம் சரிவடைந்துள்ளது.
வளர்ந்து வரும் சந்தைகள், எஸ்யுவிகள், மின்சார வாகனங்கள் ஆகியவற்றின் வரும் கலவையானது சம்வர்தனா மதர்சன் நிறுவனத்தின் வளர்ச்சியை உந்துகிறது. இதனால், 2025-27ம் நிதியாண்டுகளில் இந்நிறுவனத்தின் வருவாய் 11 சதவீத கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் வளரும். 2029ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 9.8 சதவீத லாப வரம்புடன் 2,000 கோடி டாலராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 6 முதல் 9 மாதங்களில் அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி பிரச்சினை தீர வாய்ப்புள்ளதால், இஎம்எஸ் வணிகத்தில் சிறந்த செயல்பாட்டு தெரிவுநிலை, ஒரு வருட மந்தநிலைக்கு பிறகு இலக்கு சந்தை மேக்ரோக்கள் நிலைபெறும் நிலையில், எஸ்ஏஎம்ஐஎல் மதிப்பீடு மடங்குகளில் தலைகீழ் மாற்றத்தை காணத் தொடங்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.
சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்குகள் பற்றிய தகவல்களை வழங்கும் 25 ஆய்வாளர்களில் 21 பேர் இந்நிறுவன பங்குக்கு வாங்கலாம் என்ற மதிப்பீட்டை அளித்துள்ளனர். அதேசமயம் இரண்டு ஆய்வாளர்கள் தலா வைத்திருக்கலாம் மற்றும் விற்கலாம் என்ற மதிப்பீட்டை கொண்டுள்ளனர்.
2024 செப்டம்பர் 27ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன பங்கு புதிய 52 வார உச்சமான ரூ.217ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை படிப்படியாக சரிவு கண்டு வருகிறது.
இம்மாதம் 3ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.115.85க்கு சென்றது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.132ஆக உள்ளது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்சவிலையை காட்டிலும் 39 சதவீதம் குறைவாக உள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications