பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2023ல் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது. இதன் உற்பத்தி விகிதமானது முந்தைய காலத்தை காட்டிலும் சற்று கூடுதலாகவே உள்ளது.
இந்த நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சாதகமாக காணப்படும் நிலையில், இந்த நிறுவனத்தின் ஹெல்தி வால்யூம் என்பது காணப்படுகிறது என ஐசிஐசிஐ டேரக்ட் எதிர்பார்க்கிறது.
இதற்கிடையில் தான் தரகு நிறுவனம் இப்பங்கினை ஹோல்டு செய்யலாம். இதனை வாங்கி வைக்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை 260 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இதன் வளர்ச்சி விகிதமானது பெரியளவில் வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இதன் எபிட்டா விகிதம் உச்சத்தினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இப்படி ஒரு நிலையில் இப்பங்கின் விலையானது தற்போதைய சந்தை விலையில் இருந்து 17% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பங்கின் விலையானது தற்போது 1.14% அதிகரித்து, 226.20 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
கடந்த 12 மாதங்களில் இப்பங்கின் விலையானது 30% ஏற்றத்தில் காணப்படுகிறது. இது ஏப்ரல் 2022ல் 172 ரூபாயாக இருந்த நிலையில் ஏப்ரல் 2023ல் 223 ரூபாய் என்ற லெவலில் காணப்படுகின்றது.
இந்த நிறுவனத்தி்ன் CAGR விகிதமானது 7.9 சதவீதமாக அதிகரிக்கலாம். இதன் ஒருங்கிணைந்த எபிட்டா மற்றும் ஒருங்கிணைந்த PAT விகிதமானது முறையே 13.5 சதவீதம் மற்றும் 16.4 சதவீதமாக வளர்ச்சி காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் ஒருங்கிணைந்த எபிட்டா மார்ஜின் FY23E 30.9 சதவீதமாகவும், இதே FY24E காலகட்டத்தில் 22.5 சதவீதமாகவும் வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளது.
ஆக இப்படி வளர்ச்சி எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தான் இப்பங்கினை வாங்கி வைக்கலாம் என தரகு நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.தொடர்ந்து நாட்டில் அதிகரித்து வரும் நிலக்கரி தேவைகு மத்தியில், கோல் இந்தியா நிறுவனத்தின் வளர்ச்சியும் அதிகரிக்கலாம். இது நீண்டகால நோக்கில் இந்த நிறுவன பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
நாட்டின் மின்சார உற்பத்தியில் நிலக்கரியின் தேவை உள்ளது. தொற்று நோய்க்கு பின்னர் தொழிற்துறை வளர்ச்சியானது மேம்பட்டு வருகின்றது. கடுமையான வெப்பத்தின் காரணமாக ஏசியின் தேவை அதிகரிக்கலாம். இது நிலக்கரி தேவையானது அதிகரிக்க வழிவகுக்கலாம்.
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.81% அதிகரித்து, 227.70 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 228 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 223.65 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.83% அதிகரித்து, 227.65 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 228 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 223.55 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 263.30 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 164.75 ரூபாயாகவும் உள்ளது.


Click it and Unblock the Notifications