கொச்சின் ஷிப்யார்டு லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் பங்கு அண்மைக்காலமாகவே கணிசமான வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வரக்கூடிய உடுப்பி ஷிப்யார்டு நிறுவனம் நார்வேவை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் சரக்கு கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இதனை அடுத்து ஜூலை 1ஆம் தேதி பங்குச்சந்தையில் கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பானது 2.30 சதவீதம் உயர்ந்து 2266 ரூபாய் என்ற அளவை எட்டியது. அதாவது பங்குச்சந்தையில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு அதிகபட்சமாக 2,310 ரூபாய் என்ற அளவில் உயர்ந்தது.

வர்த்தகத்தின் முடிவில் 2266 ரூபாய் என வர்த்தகமானது. ஏற்கனவே இந்த உடுப்பி ஷிப்யார்டு இதே நிறுவனத்திற்கு ஆறு கப்பல்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. தற்போது கூடுதலாக கப்பல்களை கட்டமைப்பதற்கான ஒப்பந்தங்களையும் தக்கவைத்துள்ளது.
2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இதன் பங்கு மதிப்பு 224 % உயர்ந்துள்ளது. இந்த பொதுத்துறை நிறுவன பங்கு கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 680 % அதிகரித்துள்ளது. வில்சன் ஏஎஸ்ஏ என்பது ஐரோப்பாவை சேர்ந்த ஒரு கப்பல் நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் ஐரோப்பா முழுவதும் ஓராண்டுக்கு 15 மில்லியன் சரக்குகளை கையாள்கிறது. இந்த நிறுவனத்திற்கு 100 மீட்டர் நீளம் கொண்ட 6300 மெட்ரிக் டன் எடையளவு கொண்ட சரக்கு கப்பலை தயாரித்து வழங்கும் ஒப்பந்தம் தான் உடுப்பி ஷிப்யார்டுக்கு கிடைத்துள்ளது.
எட்டு சரக்கு கப்பல்களை இந்த நிறுவனம் கட்டமைக்க இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு 1100 கோடி ரூபாய் என கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்திருக்கும் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது. கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தை பொறுத்தவரைக்கும் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 58,209 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் வருமானம் 2023 ஆம் ஆண்டில் 2572 கோடி ரூபாய் இதன் லாபம் 305 கோடி ரூபாய்.
கொச்சின் ஷிப்யார்டு நிறுவன பங்குகளில் 72% புரமோட்டர்கள் வசம் இருக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் 5.23 % பங்குகளை வைத்துள்ளன, சில்லறை முதலீட்டாளர்கள் 19.4 % பங்குகளை கொண்டுள்ளனர். இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 5, புக் வேல்யூ 190.18 ஆகும். இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 277 ரூபாய் 52 வார கால அதிகபட்ச மதிப்பு 2,427 ரூபாய்.
Story written by: Devika
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications