போனஸ் பங்கு, டிவிடெண்டு எல்லாம் உங்களுக்குதான்.. கலக்கும் குடியரசு தலைவர் முதலீடு செய்த நிறுவனம்..!!

மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். 1988 மார்ச்சில் நிறுவனங்கள் சட்டத்தினீகீழ் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. தற்போது கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் நாட்டின் கண்டெய்னர் போக்குவரத்து மற்றும் கையாளுவதில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட முனையங்களின் பரவலான நெட்வொர்க்கை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

லாபம்
2025 மார்ச் காலாண்டில் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் வருவாயாக ரூ.2,288 கோடியும், நிகர லாபமாக ரூ.299 கோடியும் ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனம் நிகர வருவாயாக ரூ.8,887 கோடி ஈட்டியுள்ளது. அந்த நிதியாண்டில் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் நிகர லாபமாக ரூ.1,292 கோடி ஈட்டியுள்ளது.

போனஸ் பங்கு, டிவிடெண்டு எல்லாம் உங்களுக்குதான்.. கலக்கும் குடியரசு தலைவர் முதலீடு செய்த நிறுவனம்..!!

கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் 2024-25ம் நிதியாண்டுக்கு ரூ.5 முக மதிப்புள்ள பங்கு ஒன்றுக்கு ரூ.2 (40 சதவீதம்) இறுதி டிவிடெண்டாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த நிதியாண்டில் இரண்டு இடைக்கால டிவிடெண்டுகள் வழங்கியுள்ளது. இதனையடுத்து, கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ஒரு பங்குக்கு அறிவித்த மொத்தம் டிவிடெண்டு ரூ.9.50 (ரூ. 2 (இறுதி டிவிடெண்டு), ரூ.3.25 (இடைக்கால டிவிடெண்டு, ரூ.4.25 (இடைக்கால டிவிடெண்டு) ) ஆக உள்ளது.

ஒப்புதல்
டிவிடெண்டோடு பங்குதாரர்களுக்கு கூடுதலாக ஒரு மகிழ்ச்சியான செய்தியையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு பங்குதாரர்களுக்கு 1:4 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பதிவுதேதியின்படி பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு நான்கு பங்குக்கும் ரூ.5 முகமதிப்புள்ள ஒரு புதிய ஈக்விட்டி பங்கு வழங்கப்படும்.

2025 மார்ச் இறுதி நிலவரப்படி, கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் 54.80 சதவீத பங்குகள் இந்திய குடியரசு தலைவருக்கு சொந்தமானது. எல்ஐசி நிறுவனம் இந்நிறுவனத்தில் 9.92 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பங்கின் விலை ரூ.720.95ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.44 ஆயிரம் கோடியாகும்.

பங்கு விலை
2025 மார்ச் 3ம் தேதியன்று, மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.601.65க்கு சென்றது. தற்போது இப்பங்கு விலை அதன் 52 வார குறைந்தபட்ச விலையிலிருந்து 20 சதவீதம் அதிகமாக உள்ளது.

இந்திய அரசு அல்லது ஒரு மாநில அரசு ஒரு நிறுவனத்தில் பங்குகளை கையகப்படுத்துதல் அல்லது வைத்திருப்பது என்பது அரசியலமைப்பின் பிரிவுகள் 77(1) மற்றும் 166 (1)ன் படி நிர்வாக நடவடிக்கை ஆகும். இதனை கருத்தில் கொண்டு ஒரு அரசு நிறுவனத்தில் பங்குகளை இந்திய குடியரசு தலைவர் அல்லது ஒரு மாநில கவர்னரின் பெயரில் வைத்திருக்கலாம். இதனால்தான் மத்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் உரிமையாளராக குடியரசு தலைவர் இருப்பார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+