திங்கட்கிழமை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை திடீர் உயர்வுக்கு OPEC அமைப்பு மற்றும் ரஷ்யாவிற்கு மத்தியிலான டீல் முக்கிய கராணமாக அமைந்துள்ளது.
சென்னை: கச்சா எண்ணெய் விலையை அதிகரிக்கும் பொருட்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவுகளைக் குறைக்க OPEC அமைப்புடன் ரஷ்யா இணைந்துள்ளதால், திங்கட்கிழமை வர்த்தகம் துவங்கிய முதல் கச்சா எண்ணெய்யின் விலை தொடர் உயர்வில் இருந்தது.
இதன் படி இன்றைய வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 4 சதவீதம் உயர்ந்து ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 57.89 டாலராக உயர்ந்துள்ளது.
இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 54.51 டாலர் வரையிலான உயர்வைச் சந்தித்துள்ளது.

12.30 மணியளவில் WTI கச்சா எண்ணெய் விலை 1.28 சதவீதம் உயர்ந்து 51.50 டாலராகவும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.81 சதவீதம் உயர்ந்து 54.33 டாலராகவும் உள்ளது.
உலகில் 54 சதவீத கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு இருக்கும் 24 நாடுகளின் தற்போதைய உற்பத்தி அளவு 52.6 மில்லியன் பேரல். இப்புதிய ஒப்புதல்கள் படி 24 நாடுகள் இணைந்து ஒரு நாளுக்குச் சுமார் 1.76 மில்லியன் பேரலை குறைக்க முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications