டிசிபி வங்கி டூ ஆதித்யா பிர்லா பேஷன் வரை.. இந்த 5 பங்குகளை வாங்கி போடுங்க!

இந்திய பங்கு சந்தையில் சமீபத்திய வாரங்களாகவே மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், தற்போது முதலீடு செய்யலாமா? இது சரியான நேரமா? அப்படி வாங்கினால் எந்த துறை சார்ந்த பங்குகளை வாங்கலாம், நிபுணர்களின் பரிந்துரை என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட், இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், டிசிபி வங்கி லிமிடெட், ஆதித்யா பிர்லா பேஷன், ராடிகோ கைத்தான் லிமிடெட் உள்ளிட்ட பங்குகளை தரகு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது.

அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட்

அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட்

இப்பங்கினை முதலீட்டாளர்கள் 3 வாரம் முதல் 4 வாரங்கள் வரையில் வாங்கி வைத்திருக்க பரிந்துரைத்துள்ளது.

அசாஹி இந்தியா கிளாஸ் லிமிடெட் நிறுவனம் தினசரி மற்றும் வாராந்திர டைம் பிரேமில் இப்பங்கானது ஏற்றம் காணும் விதமாக காணப்படுகின்றது. ஆர்எஸ்ஐ மற்றும் சில டெக்னிக்கல பேட்டர்ன்கள் ஏற்றம் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் இலக்கு விலையினை 695 - 725 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 580 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளது.

 

இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ்

இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ்

இந்தோ கவுண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையும் பொலிங்கர் பாண்ட் பேட்டர்னில் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதுவும் தினசரி மற்றும் வார கேண்டில் பேட்டர்ன் அடிப்படையில் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதே ஆர்எஸ்ஐ-யிலும் 50-க்கும் மேலாக காணப்படுகின்றது. இதன் இலக்கு விலை 175 - 187 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ள தரகு நிறுவனம் கணித்துள்ளது. இதே ஸ்டாப் லாஸ் 148 ரூபாயாகவும் உள்ளது. இதனை 3 - 4 வாரங்களுக்கு ஹோல்ட் செய்ய கூறியுள்ளது.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி

இந்த பங்கின் விலையானது 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கு மேலாக காணப்படுகின்றது. ஆக இப்பங்கின் விலையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதன் இலக்கு விலையாக 108 - 117 ரூபாயாக கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 86 ரூபாய நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆதித்யா பிர்லா பேஷன்

ஆதித்யா பிர்லா பேஷன்

ஆதித்யா பிர்லா பேஷன் பங்கு விலையானது தினசரி சார்ட் பேட்டர்னில், முக்கிய லெவலை உடைத்துள்ளது. இப்பங்கின் இலக்கு விலையை 335 - 348 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் 276 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதனை அடுத்த 3 - 4 வாரங்களுக்கு ஹோல்ட் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

ராடிகோ கைத்தான்

ராடிகோ கைத்தான்

தினசரி மற்றும் வாராந்திர கேண்டில் பேட்டர்னில் இப்பங்கின் விலையானது ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்எஸ்ஐ-யிலும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இப்பங்கின் இலக்கு விலையினை 1130 - 1175 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் - 955 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதனையும் அடுத்த 3 - 4 வாரங்களுக்கு ஹோல்ட் செய்ய பரிந்துரை செய்துள்ளது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+