பணத்தை ரெடி பண்ணுங்க.. டிசம்பர் மாதம் செம சான்ஸ் கிடைச்சிருக்கு..!! #IPO

இந்தியப் பங்குச் சந்தை 2025 ஆண்டு ஏற்கெனவே பல புதிய சாதனைகளைப் படைத்துவிட்ட நிலையில் இந்த ஆண்டின் இறுதி மாதமான டிசம்பரிலும் ஐபிஓ மழை பெய்ய உள்ளது. இந்த மாதம் மட்டும் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிடப்பட்ட உள்ளது. இந்திய பங்குச்சந்தையில் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ள வேளையிலும், இந்த ஆண்டு பங்குச்சந்தை முதலீடுகள் அதிகப்படியான தாக்கத்தை எதிர்கொண்ட நிலையிலும் முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையிலும், புதிய நம்பிக்கையின் அடிப்படையிலும் அதிகளவில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர்.

அக்டோபர் மாதம் 10 ஐபிஓக்கள் வெளியானது, நவம்பர் மாதத்தில் 9 ஐபிஓ வெளியான நிலையில், டிசம்பரில் 25-க்கும் மேற்பட்ட ஐபிஓக்கள் வர உள்ள காகணத்தால் இந்த ஆண்டு ஐபிஓ சந்தை பிரம்மாண்டமாக முடிக்க உள்ளது.

பணத்தை ரெடி பண்ணுங்க.. டிசம்பர் மாதம் செம சான்ஸ் கிடைச்சிருக்கு..!! #IPO

5 பெரிய ஐபிஓக்கள்
இந்த மாதத்தின் மிகப்பெரிய ஐபிஓக்களில் முதலிடத்தில் இருப்பது ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் உள்ளது. சுமார் 10,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மீஷோ (5,400 கோடி ரூபாய்), க்ளீன் மேக்ஸ் என்விரோ எனர்ஜி சொல்யூஷன்ஸ் (5,200 கோடி ரூபாய்), ஏஐ தொழில்நுட்ப நிறுவனமான ஃப்ராக்டல் அனலிட்டிக்ஸ் (4,900 கோடி ரூபாய்), ஜூனிபர் கிரீன் எனர்ஜி (3,000 கோடி ரூபாய்) ஆகியவை அடுத்தடுத்து ஐபிஓ வெளியிடுகிறது.

இவை அனைத்தும் புதிய தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இ-காமர்ஸ், மியூச்சுவல் ஃபண்ட் மேலாண்மை என எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை கொண்ட துறைகளைச் சேர்ந்தவை என்பதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

பிற முக்கிய ஐபிஓக்கள்
பெரிய ஐபிஓக்களைத் தவிர, நடுத்தர அளவிலான பல ஐபிஓக்களும் இந்த மாதம் வருகின்றன. வேக்ஃபிட் இன்னோவேஷன்ஸ் (1,500 கோடி ரூபாய்), இன்னோவேட்டிவ்யூ (1,500 கோடி ரூபாய்), பார்க் மெடி வேர்ல்ட் (1,200 கோடி ரூபாய்), நெஃப்ரோப்ளஸ் (1,000 கோடி ரூபாய்), ஏக்யுஸ் (1,000 கோடி ரூபாய்) ஆகியவை இதில் முக்கியமானவை. மீஷோ மற்றும் Aequs டிசம்பர் 3 முதல் 5 வரை ஐபிஓ தொடங்குவதாக அறிவித்துள்ளன.

CompanyOpening DateClosing DateIssue Price (Rs.)Total Issue size (Rs.cr.)
Riddhi Display Equipments Ltd. IPOMon, Dec 08, 2025Wed, Dec 10, 202595.00 to 100.0024.68
Corona Remedies Ltd. IPOMon, Dec 08, 2025Wed, Dec 10, 2025 655.37
Wakefit Innovations Ltd. IPOMon, Dec 08, 2025Wed, Dec 10, 2025185.00 to 195.001288.89
K. V. Toys India Ltd. IPOMon, Dec 08, 2025Wed, Dec 10, 2025227.00 to 239.0040.15
Flywings Simulator Training Centre Ltd. IPOFri, Dec 05, 2025Tue, Dec 09, 2025181.00 to 191.0057.05
Encompass Design India Ltd. IPOFri, Dec 05, 2025Tue, Dec 09, 2025101.00 to 107.0040.21
Methodhub Software Ltd. IPOFri, Dec 05, 2025Tue, Dec 09, 2025190.00 to 194.00103.02
Western Overseas Study Abroad Ltd. IPOThu, Dec 04, 2025Mon, Dec 08, 20255610.07
Luxury Time Ltd. IPOThu, Dec 04, 2025Mon, Dec 08, 202578.00 to 82.0018.74
Vidya Wires Ltd. IPOWed, Dec 03, 2025Fri, Dec 05, 202548.00 to 52.00300.01
Aequs Ltd. IPOWed, Dec 03, 2025Fri, Dec 05, 2025118.00 to 124.00921.81
Meesho Ltd. IPOWed, Dec 03, 2025Fri, Dec 05, 2025105.00 to 111.005421.2
Shri Kanha Stainless Ltd. IPOWed, Dec 03, 2025Fri, Dec 05, 20259046.28
Neochem Bio Solutions Ltd. IPO OTue, Dec 02, 2025Thu, Dec 04, 202593.00 to 98.0044.97
Helloji Holidays Ltd. IPO OTue, Dec 02, 2025Thu, Dec 04, 2025110.00 to 118.0010.96
Ravelcare Ltd. IPO OMon, Dec 01, 2025Wed, Dec 03, 202513024.1
Clear Secured Services Ltd. IPO OMon, Dec 01, 2025Wed, Dec 03, 2025125.00 to 132.0085.6
Speb Adhesives Ltd. IPO OMon, Dec 01, 2025Wed, Dec 03, 202552.00 to 56.0033.73
Invicta Diagnostic Ltd. IPO OMon, Dec 01, 2025Wed, Dec 03, 202580.00 to 85.0028.12
Astron Multigrain Ltd. IPO OMon, Dec 01, 2025Wed, Dec 03, 20256318.4

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+