டவுன் டு அப்.. மீண்டும் மீண்டு வந்த டிஃபென்ஸ் பங்குகள்.. இந்த விலையில் இந்த 3 பங்குகள் வாங்கலாம்..!!

பங்குச் சந்தையில் சில நாட்களுக்குப் பிறகு பாதுகாப்புத் துறை (Defence) பங்குகள் மீண்டு வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இவை 10 சதவீதம் வரை உயர்ந்தது. அதன்படி, சில பாதுகாப்புப் பங்குகள் நல்ல விலையில் வர்த்தகமாகி வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்புப் பங்குகள் பெரும் ஏற்றம் கண்டன. இவை புதிய உச்சத்தையும் பதிவு செய்தது. ஆனால் அதன் பிறகு அவை சரிவை சந்தித்தன. இது 30 சதவீதம் வரையிலும் சரிவை பதிவு செய்துள்ளது. ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் பாதுகாப்பு துறை பங்குகள் மீண்டும் எழுச்சி கண்டன.

நல்ல லாபத்தைப் பதிவு செய்தது. கொச்சின் ஷிப்யார்டின் பங்கு விலை 10 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட்டில் லாக் ஆனது. மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமும் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐடியா ஃபோர்ஜ், லார்சன் அன்ட் டூப்ரோ, பாரத் டைனமிக்ஸ் மற்றும் பிஹெச்இஎல் போன்ற பங்குகள் 2 சதவீதத்துக்கு மேல் லாபம் பெற்றன.

டவுன் டு அப்.. மீண்டும் மீண்டு வந்த டிஃபென்ஸ் பங்குகள்.. இந்த விலையில் இந்த 3 பங்குகள் வாங்கலாம்..!!

சில நாட்களுக்குப் பிறகு பாதுகாப்புப் பங்குகள் போக்கு மேலும் ஏற்றத்தை குறிக்கும் என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சில பாதுகாப்புப் பங்குகள் சிறப்பான விலையில் கிடைக்கும், இவற்றில் பெரும்பாலான பாதுகாப்புப் பங்குகள் பொதுத் துறையைச் சேர்ந்தவை அல்ல, எனவே, அவை கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும், இந்த பங்குகள் பல ஆண்டுகளாக மல்டிபேக்கர் வருமானத்தை அளித்துள்ளதால், அதிக மதிப்பீட்டில் விற்பனை அழுத்தத்தை எதிர்கொள்கின்றன எனவும், இவை மீண்டு வந்தவுடன் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

எஸ் எஸ் வெல்த் ஸ்ட்ரீட் நிறுவனர் சுகந்தா சச் தேவா கூறுகையில், தற்போது சிறப்பான விலையில் கிடைக்கும் சில பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளார். அவற்றில், தொழில்நுட்ப விளக்கப்படத்தைப் பொறுத்தவரை, மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ், கொச்சின் ஷிப்யார்ட், லார்சன் மற்றும் டர்போ ஆகியவை நல்ல விலையைப் பெறுவதாகக் கூறியுள்ளார்.

மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் பங்கு விலை ரூ. 4,300- 4,350 வரையில் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இலக்கு விலை ரூ. 5,100 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்டாப் லாஸ் ரூ. 3,700 ஆக நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் பங்கு 7.42% உயர்வுடன் ரூ.4,360 ஆக விற்பனை செய்யப்பட்டது.

கொச்சின் ஷிப்யார்டு பங்கு ரூ. 1,800 என்ற விலையில் வாங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இலக்கு விலை ரூ. 2,280 நிர்ணயம் செய்யப்பட்டது. ஸ்டாப் லாஸ் ரூ. 1,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு கடந்த வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 10% உயர்ந்து ரூ.1846 ஆக விற்பனையானது.

லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) பங்கு ரூ. 3,700 என்ற விலையில் வாங்கலாம். இலக்கு விலை ரூ. 4,180 நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டாப் லாஸ் ரூ. 3,300 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இதன் பங்குகள் 2.97% உயர்வுடன் ரூ.3793 ஆக விற்பனை செய்யப்பட்டது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+