ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்துள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை தொடர்ந்து பங்குச்சந்தையில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் உயர்வை கண்டிருக்கின்றன.
கடந்த மாதம் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்த ராஜாங்க ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இந்த சூழலில் இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கிறது.

ஜெய்ஸ்ரீ முகமது மற்றும் லஷ்கர் ஐ தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு சொந்தமான முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்துள்ளது. பங்குச்சந்தையில் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை கண்டிருக்கின்றன.
மஸாகான் டாக் ஷிப்பில்டர்ஸ் (Mazagon Dock Shipbuilders ) நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 சதவீதம் உயர்ந்து காலை 9.35 மணிக்கு ஒரு பங்கின் மதிப்பு 3,080 ரூபாய் என வர்த்தகமானது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் (Hindustan Aeronautics Ltd) நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1.5% உயர்வு கண்டது. காலை 9.20 மணி அளவில் ஒரு பங்கின் மதிப்பு 4580 ரூபாய் என வர்த்தகமானது. அதேபோல பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Ltd ) நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 1.22 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு 314 ரூபாய் என வர்த்தகமானது.
ஒட்டுமொத்தமாகவே நிஃப்டியில் டிஃபன்ஸ் இண்டெக்ஸ் 1 சதவீதம் வரை உயர்வு கண்டது. செவ்வாய்க்கிழமை அன்று பல்வேறு முதலீட்டாளர்களும் இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை பதற்றம் காரணமாக பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து லாபம் கண்டனர். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று நிஃப்டி டிஃபன்ஸ் இண்டெக்ஸ் சரிவை கண்டது.
இந்தியா நடத்திய தாக்குதலை தொடர்ந்து தற்போது பாதுகாப்பு துறை நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்திருக்கின்றன. எல்லையில் பதற்றம் அதிகரித்து இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை தொடங்கியிருக்கும் சூழலில் பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இதன் மூலம் அதிக ஆர்டர்கள் கிடைக்கும் என்றும் அவற்றிடம் இருந்து அரசு நிறைய கொள்முதல் செய்யும் என்றும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications