பங்குச்சந்தை என்றால் என்ன? இவ்வளவுதானா.. ரொம்ப சிம்பிள் விஷயம்!

சென்னை: நம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக பல வழிகளில் பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், நீண்ட காலத்திற்கு செல்வத்தை உருவாக்க வேண்டும் என்றால் பங்குச் சந்தை (Share Market) ஒரு சிறந்த வழியாக இருக்கும். ஆனால், நீங்கள் பங்குச் சந்தை பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல் முதலீடு செய்வது ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், பங்குச் சந்தை எப்படி இயங்குகிறது, அதில் பங்கேற்க என்ன தேவை, எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

பங்குச் சந்தை என்றால் என்ன?: நீங்கள் எப்போதாவது ஒரு பொருளை குறைந்த விலையில் வாங்கி, பின்னர் அதிக விலையில் விற்று லாபம் சம்பாதித்திருக்கிறீர்களா.. இதுவே பங்குச் சந்தையின் அடிப்படையாகும். வளர்ந்து வரும் நிறுவனங்கள் பணம் திரட்டவும், முதலீட்டாளர்கள் பணத்தை லாபகரமாக மாற்றவும் உதவும் களம் தான் பங்குச் சந்தை. இதற்காக, ஒரு நிறுவனம் தனது உரிமையைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை "பங்குகள்" (Shares) என்று அழைக்கும், அதனை விற்கவும் முன் வரும். இந்தப் பங்குகளை யார் வேண்டுமானாலும் வாங்கலாம்.

 பங்குச்சந்தை என்றால் என்ன? இவ்வளவுதானா.. ரொம்ப சிம்பிள் விஷயம்!


ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தை, இன்னும் மேம்படுத்துவதற்காக நிதி தேவைப்படும் பட்சத்தில் பொதுமக்களின் உதவியை அவை நாடக்கூடும். ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு பணம் தேவையோ, அதற்கேற்ப அந்த நிறுவனத்தின் உரிமையை பல பகுதிகளாகப் பிரித்து அவற்றை விற்பனை செய்வார்கள். இந்த செயல்பாட்டினை IPO என்று கூறுவர். இதனை ஆங்கிலத்தில் Initial Public Offerings என்று சொல்வார்கள். IPO என்பது ஒரு நிறுவனம் தனது நிறுவன பங்குகளை முதன் முதலாக பங்குச்சந்தையில் பட்டியலிட ஏற்பாடு செய்யும் ஒரு நடவடிக்கையாகும். இதனால் அந்த குறிப்பிட்ட நிறுவனம் பிரைவேட் நிறுவனத்தில் இருந்து பப்ளிக் நிறுவனமாக மாறுகிறது. அது ஏன் என்றால் நீங்கள் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள் எனும் பட்சத்தில் அந்த நிறுவனத்தில் உங்களுக்கும் உரிமை உண்டு.

பங்குச்சந்தையை பற்றி புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தை பார்ப்போம்: எடுத்துக்காட்டாக, "ABC ஹோட்டல்" என்ற உணவகக் கடை வியாபாரத்தை விரிவுபடுத்த நினைக்கிறது. ஆனால், அதற்கு போதிய பணம் இல்லை. அதனால், பங்குச் சந்தைக்குச் சென்று, தனது உரிமையை 1000 பங்குகளாகப் பிரித்து, ஒவ்வொரு பங்கின் விலையையும் ரூ. 100 என நிர்ணயிக்கிறது. யார் வேண்டுமானாலும் இந்தப் பங்குகளை வாங்கலாம். நீங்கள் 10 பங்குகளை வாங்கினால், ABC ஹோட்டலில் நீங்கள் 1 % உரிமையாளர் ஆகிவிடுவீர்கள்.

சரி பங்குகளை வாங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும்: பங்குகளை வாங்கி முடித்த பிறகு, நீங்கள் பங்குகளை வாங்கிய நிறுவனம் அதிக லாபம் பெற்றால், அந்தப் பங்கின் விலை தினசரி வர்த்தகத்தில் பங்குகள் கைமாறும் போது அதன் மதிப்பு உயரும்.

உதாரணமாக, ABC ஹோட்டலில் இருந்து ரூ. 100 ரூபாய் கொடுத்து 10 பங்குகளை வாங்கினால், அவற்றின் மொத்த முதலீடாக ரூ. 1000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். தற்போது நல்ல சுவையின் காரணமாக, ABC ஹோட்டலின் லாபம் உயர்கிறது என்று வைத்துக் கொள்வோம். கூடுதலாக வரும் லாபத்தை இந்த ஹோட்டல் மறுமுதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கமோ அல்லது புதிய கிளையை திறக்கிறது என்றால் அதன் மதிப்பு உயரும்.

இதற்கு ஏற்றார் போல் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மத்தியில் இதற்கான டிமாண்ட் ஏறி இறங்கும். இப்போது விலையும் மாறும். இதன் அடிப்படையில் தற்போது பங்கு விலை ரூ. 150 ரூபாய் உயர்ந்தால், அதே 10 பங்கின் விலை ரூ. 1,500 ரூபாயாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் செய்த 1000 ரூபாய் முதலீட்டுக்கு ஆதாயமாக ரூ. 500 ரூபாய் கிடைத்திருக்கும். இந்த 500 ரூபாய் லாபத்தை மூலதன ஆதாயம் என அழைக்கப்படுகிறது, இதற்கு வரியும் விதிக்கப்படும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மூலதன ஆதாயம் வரி இதனை ஆங்கிலத்தில் "Capital Gain Tax" என்று கூறுவார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு நீங்கள் முதலீடு செய்த தொகையிலிருந்து எவ்வளவு லாபம் பெற்றிருக்கிறீர்கள் என்பதை பொறுத்து விரி விதிக்கப்படும்.

பங்கு விலை எப்போது உயரும்?: ஒரு நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு, அதன் பிறகு நல்ல லாபத்தை ஈட்டும் பட்சத்தில், அதனுடைய லாபம் அதிகரிக்கும். இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வமாக இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில் பங்கு விலைகள் தொடர்ந்து உயரும். பங்குச் சந்தையை ஒழுங்குபடுத்த SEBI (Securities and Exchange Board of India) என்ற அமைப்பு செயல்படுகிறது.

சரி ஒரு நிறுவனம் தனது நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக, உடனே பங்குகளை விற்க முடியுமா என்றால் அதுதான் கிடையாது. அதற்கு சில வழிமுறைகள் உள்ளன. முதலில் அந்நிறுவனம் SEBI-யிடம் அனுமதி பெற வேண்டும், SEBI என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.

SEBI என்றால் என்ன?: SEBI என்பது இந்திய பங்குச் சந்தையை பற்றிக் கண்காணிக்கும் மத்திய அரசின் ஒழுங்குமுறை அமைப்பாகும். பங்குச் சந்தையில் முறைகேடுகள் நடப்பதைத் தடுப்பதும், முதலீட்டாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதும் SEBI-இன் முக்கிய பணிகள்.

SEBI என்ன செய்கிறது?: பங்குச் சந்தை விதிகளை உருவாக்குவது மற்றும் அவற்றை சரிவர கண்காணிப்பது ஆகியவை SEBI-இன் முக்கிய வேலை. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களிடம் இருந்து முழுமையான தகவல்களைப் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்போது, இந்தியாவில் உள்ள இரண்டு முக்கிய பங்குச் சந்தைகள் பற்றி பார்ப்போம்.

National Stock Exchange (NSE) - தேசிய பங்குச் சந்தை
Bombay Stock Exchange (BSE) - மும்பை பங்குச் சந்தை

இந்த இரண்டு பங்குச் சந்தைகளும் நிறுவனங்களின் பங்குகளை விற்கவும், வாங்கவும் தளமாக இருக்கின்றன.

தேசிய பங்குச் சந்தை (NSE): இந்தியாவில் மிகப் பெரிய பங்குச் சந்தை NSE ஆகும். இது 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 1700-க்கும் அதிக கம்பேனிகள் பதிவு செய்துள்ளனர். Nifty 50 என்ற முக்கிய பங்கு குறியீட்டைக் ((Stock Index) கொண்டுள்ளது. இது இந்தியாவின் முன்னணி 50 நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுவதாகும். இது மும்பையில் உள்ளது.

மும்பை பங்குச் சந்தை (BSE): ஆசியாவின் பழமையான பங்குச் சந்தைகளில் ஒன்று. BSE 1875-இல் நிறுவப்பட்டது. Sensex என்ற முக்கிய பங்கு குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இந்தியாவின் முன்னணி 30 நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+