ஜெர்மனி நாட்டின் முன்னணி வங்கியாக இருக்கும் Deutsche Bank மூலம் ஐரோப்பிய சந்தைக்கு அடுத்த பெரிய பிரச்சனை உருவாகியுள்ளது.
வியாழன் இரவு முதல் Deutsche Bank-ன் credit default swaps அளவு பெரிய அளவில் அதிகரித்த நிலையில் இன்சூரன்ஸ்-க்கான செலவுகள் அதிகரித்தது. இதனால் வெள்ளிக்கிழமை ஐரோப்பிய பங்குச்சந்தை துவங்கியது முதல் Deutsche Bank பங்குகள் சுமார் 13%-க்கு மேல் சரிந்து வர்த்தக முடிவில் 8.22 சதவீதம் சரிவுடன் முடிந்தது.
ஆனால் Deutsche Bank தாக்கம் அமெரிக்க சந்தையில் எதிரொலிக்காத காரணத்தால், இன்று திங்கட்கிழமை ஆசிய சந்தையில் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை 250 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது. இதேவேளையில் இன்று ஐரோப்பிய சந்தை துவங்கிய உடன் வர்த்தகம் எப்படி வேண்டுமானாலும் மாறும் தன்மை கொண்டே உள்ளது.
Deutsche Bank பிரச்சனை
இதேபோல் Deutsche Bank-யின் பிரச்சனை கிரெடிட் சூயிஸ் போல மோசமானது இல்லை என சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். Deutsche Bank 10 காலாண்டுகளாக தொடர்ந்து லாபத்தை பதிவு செய்து வருவது மட்டும் அல்லாமல், கடனுக்கான தீர்வு காணுவதிலும், பணபுழக்கத்திலும் வலிமையான நிலையை கொண்டு உள்ளது.
பணப்புழக்கம்
இதேபோல் Deutsche Bank 2022 ஆம் ஆண்டு இறுதியில் 142 சதவீதம் liquidity coverage ratio கொண்டு உள்ளது. இதன் மூலம் வங்கியில் திடிரென பணம் வெளியேறினால் கூட 30 நாட்களுக்கு போதுமான பணப்புழக்கம் உள்ளது. இதனால் Deutsche Bank, கிரெடிட் சூயிஸ் போல் ஆகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ்
Deutsche Bank-யின் முக்கிய பிரச்சனை கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் அளவில் ஏற்பட்ட உயர்வு தான், கிரெடிட் டீஃபால்ட் ஸ்வாப்ஸ் என்றால் ஒரு நிறுவனத்தின் பத்திரதாரர்களை வைத்திருப்பவர்களுக்கான திவாலாகாமல் காப்பற்றும் உத்தரவாதம் வழங்க கூடிய காப்பீட்டு வடிவம். புதன் கிழமை 142 அடிப்படை புள்ளிகளில் இருந்து வியாழன் இரவு 173 அடிப்படை புள்ளிகளுக்கு உயர்ந்தது. இதன் எதிரொலியாக தான் இன்று பங்குகள் பெரும் சரிவை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய சந்தை
Deutsche Bank பிரச்சனை ஐரோப்பிய சந்தையை தடுமாற செய்தாலும் அமெரிக்க சந்தையை பாதிக்கவில்லை, இதனால் இன்று ஆசிய சந்தையும் பாதிக்கவில்லை. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் டாவ் ஜோன் இன்டஸ்ட்ரீயல் ஆவ்ரேஜ் குறியீடு 0.41 சதவீதமும், எஸ் அண்ட் பி 500 குறியீடு 0.56 சதவீதமும், நாஸ்டாக் காம்போசிட் 0.3 சதவீதமும் உயர்ந்துள்ளது.
அமெரிக்க வங்கிகள்
இதேவேளையில் மார்ச் 15 உடன் முடிந்த வாரத்தில் அமெரிக்க வங்கிகளில் இருந்து மொத்தம் 98.4 பில்லியன் டாலர் தொகை மக்களும், வாடிக்கையாளர்களும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இதேபோல் சிறிய மற்றும் பிராந்திய வங்கிகளில் இருந்து வெளியேறிய 120 பில்லியன் டாலர் தொகையில் சுமார் 67 பில்லியன் டாலர் பெரிய வங்கிகளுக்கு மாற்றப்பட்டு உள்ளது என அமெரிக்க பெடரல் ரிசர்வ் தரவுகள் கூறுகிறது.
மும்பை பங்குச்சந்தை
ஆனால் Deutsche Bank ஐரோப்பிய சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தினால் கட்டாயம் இன்று மும்பை பங்குச்சந்தையில் ஓட்டையை உருவாக்கும். சென்செக்ஸ் குறியீடு 286.6 புள்ளிகள் உயர்ந்து, 57,813.70 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீடு 71.30 புள்ளிகள் உயர்ந்து 17,016.35 புள்ளிகளை அடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications