மின்சார கட்டமைப்புகளுக்கான கேபிள் , டவர்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வழங்கும், டைமண்ட் பவர் இன்பிராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனம் (Diamond Power Infrastructure Ltd) கடந்த ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 65,000% லாபத்தை பெற்று தந்துள்ளது.
டைமண்ட் பவர் நிறுவனம் 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் மின்சார கேபிள்களை தயாரித்து வழங்கி வருகிறது மேலும் டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் மின்சார கட்டுமானத்திற்கு தேவையான பொருட்களையும் உற்பத்தி செய்து வழங்குகிறது.

டைமண்ட் பவர் நிறுவனம் செவ்வாய்க்கிழமை அன்று அதானி லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 900 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்றுள்ளது. வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இந்த ஆர்டரை டெலிவரி செய்து முடிக்கப்பட வேண்டும் என டைமண்ட் பவர் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
டைமண்ட் பவர் நிறுவனம் தற்போதைக்கு அதானி குழுமத்திடம் இருந்து மட்டும் 1300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றிருக்கிறது. இந்த செய்தி வெளியானதை அடுத்து டைமண்ட் பவர் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ஜூலை 10ஆம் தேதி அன்று பங்குச்சந்தையில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. ஒரு பங்கின் விலை 1,292 ரூபாய் என்ற அளவில் அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் இதன் மதிப்பு இரண்டு சதவீதம் என உயர்ந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 6659 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவன பங்கின் ஃபேஸ் வேல்யூ 10 ஆக இருக்கிறது. இந்த ஸ்மால் கேப் பங்கானது கடந்த மூன்று மாத காலத்தில் மற்றும் 118 % உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 614 % லாபத்தை பெற்று தந்துள்ளது. அதேபோல கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 6500 % லாபத்தை பெற்று தந்துள்ளது. கடந்த மூன்று ஆண்டு காலத்தில் 1,46,000% லாபத்தை பெற்றுத் தந்துள்ளது.
இந்த நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு 22 ரூபாய் , 52 வார கால உயர்ந்த பட்ச மதிப்பு 1292 ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தில் ஓராண்டுக்கு முன்னர் 50,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் அதன் தற்போதைய மதிப்பு 3.25 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும்.
டைமண்ட் பவர் நிறுவனத்தின் நிதி நிலைமையை பார்க்கும்போது 2024 ஆம் நிதி ஆண்டின் கடைசி காலாண்டில் நிகர விற்பனை என்பது 134 கோடி ரூபாயாக இருந்தது. இது 2023 ஆம் நிதி ஆண்டுடன் ஒப்பிடுகளில் 800 % அதிகமாகும். இபிஎஸ் எனப்படும் இயர்னிங் பெர் ஷேர் என்பது ரூ. 2.74 என உயர்ந்திருக்கிறது.
story written by: Devika


Click it and Unblock the Notifications