பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கவலையில்லை..!! 28% லாபம் தரப்போகும் மல்டிபேக்கர் பங்கு..!!

ஈரான் போர் விவகாரம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தாலும் குறிப்பிட்ட சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு சிறந்த லாபத்தையே தந்துள்ளன. அந்த வகையில் பங்குச்சந்தை சரிவிலும் முதலீட்டாளர்களுக்கு லாபம் பெற்று தந்த ஒரு மல்டிபேக்கர் பங்கு குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

டைமண்ட் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (Diamond Power Infrastructure) நிறுவனம் கேபிள்கள் மற்றும் கண்டக்டர்கள் உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனம். இந்த நிறுவன பங்கு மதிப்பு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. பங்குச்சந்தை சரிவின் மத்தியிலும், டைமண்ட் பவர் நிறுவனத்தின் பங்கு விலை 2 நாட்களாக 6.5 சதவீதம் அதிகரித்து, 251 ரூபாய் என்ற புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கவலையில்லை..!! 28% லாபம் தரப்போகும் மல்டிபேக்கர் பங்கு..!!

பிப்ரவரி மாதத்தில் இதன் பங்கு விலை 115.80 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் அங்கிருந்து தற்போது வரை சுமார் 107 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டித் தந்துள்ள 'மல்டிபேக்கர்' பங்காக உருவெடுத்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் மாதத்திற்கு பின் இந்த பங்கு ஏறுமுகமாகவே இருக்கிறது.

பிரபல தரகு நிறுவனமான 'இன்-கிரெட்', டைமண்ட் பவர் பங்கின் மீதான தனது பார்வையை நேர்மறையாக மாற்றியுள்ளது. அதாவது இந்த பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ள அந்த நிறுவனம், இதன் இலக்கு விலையை 300 ரூபாய் ஆக நிர்ணயித்துள்ளது. அதாவது, தற்போதைய விலையிலிருந்து இன்னும் சுமார் 28 சதவீதம் வரை உயரும் என கணித்துள்ளது. இதனால் இதன் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Also Read

வதோதராவில் டைமண்ட் பவர் இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலை, தற்போது அதன் முழு திறனில் வெறும் 25-30% மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பெரிய அளவில் முதலீடு செய்யாமலேயே, இந்த ஆலையின் உற்பத்தியை அதிகரிக்கும்போது, நிறுவனத்தின் வருவாய் பல மடங்கு பெருகும் என்று இன்-கிரெட் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் நிறுவனத்திடம் தற்போது சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் உள்ளன. மேலும், டேட்டா சென்டர் பவர் கேபிள்களுக்காக 436 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டரையும் நிறுவனம் பெற்றுள்ளது. இது வருங்கால வளர்ச்சிக்கு வலுசேர்க்கிறது என இன் கிரெட் கூறியுள்ளது.

Recommended For You

கடந்த கால சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, நிறுவனத்தின் நிதி நிலைமை தற்போது வலுவடைந்துள்ளதாககவும் நிர்வாகம் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறுகிறது. இந்தியாவில் Power Transmission, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டேட்டா சென்டர் துறைகளின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த துறைகளில் டைமண்ட் பவர் முக்கியப் பங்கு வகிப்பதால், வரவிருக்கும் ஆண்டுகளில் இதன் வருவாய் மற்றும் லாபம் கணிசமாக அதிகரிக்கும் என கணித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளிலேயே இந்த நிறுவன பங்கு மதிப்பு 2670% உயர்ந்துள்ளது. இந்நிறுவன பங்குகளில் 84 % பிரமோட்டர்களிடமும், 15.55% சில்லறை முதலீட்டாளர்கள் வசமும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வசம் 0.36% பங்குகளும் உள்ளன. கடந்த காலாண்டில் இதன் வருவாய் 48%, லாபம் 61% உயர்ந்ததிருந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+