Diwali Muhurat Stocks: பங்குச் சந்தையில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி மாலை 6 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் ஒரு மணி நேரம் சிறப்பு வர்த்தகம் தொடங்குகிறது. இந்த சிறப்பு நேர வர்த்தகம் ஆனது தீபாவளியன்று தொடங்கும். இது புதிய நிதி ஆண்டின் (சம்வத் 2081) தொடக்கத்தைக் குறிக்கிறது.
இந்த தீபாவளி சிறப்பு வர்த்தகத்தில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு செல்வ செழிப்பு மற்றும் நிதி வளர்ச்சியை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், பல்வேறு தரகு நிறுவனங்கள் இந்த நேரத்திற்கான சிறந்த பங்குகளை தேர்ந்தெடுத்து வழங்குகின்றனர். அந்த வகையில், மோதிலால் ஓஸ்வால் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. அவற்றில் லார்ஜ்கேப், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் உள்ளன.

தீபாவளி சிறப்பு வர்த்தகத்திற்கான வாங்கவேண்டிய பங்குகள்-ஐசிஐசிஐ வங்கி: மோதிலால் ஓஸ்வாலின் தீபாவளி தேர்வுகளில் முதல் பங்காக ஐசிஐசிஐ பங்குகளை ரூ.1400 என்ற இலக்கு விலையில் ரூ.1336 வாங்கும் மதிப்பீடுகளை வழங்கியுள்ளது.
எச்சிஎல் டெக்: எச்சிஎல் டெக் பங்கிற்கு மோதிலால் ஓஸ்வால் ரூ. 2300 இலக்கு விலையுடம் ரூ.1845 வாங்கும் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
எல்&டி: மோதிலால் ஓஸ்வால் வழங்கியுள்ள முக்கிய பங்கு தேர்வுகளில் எல்&டி நிறுவனத்திற்கு ரூ.4250 இலக்குடன் ரூ.3443 என்ற விலையில் வாங்க மோதிலால் ஓஸ்வால் பரிந்துரைத்துள்ளது.
டைட்டன்: மோதிலால் ஓஸ்வால், ஸ்டைல் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை வாங்கும் மதிப்பீட்டை பரிந்துரைத்துள்ளது. இந்த நிறுவனத்திற்கு இலக்கு விலையாக ரூ. 4300 உடன் தற்போதைய விலையி. ரூ. 3332 வாங்க பரிந்துரைத்துள்ளது.
ஜொமாட்டோ: மோதிலால் ஓஸ்வால் ஜொமாட்டோ பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. ஜொமாட்டோ பங்குக்கு ரூ.330 இலக்கு விலையில் ரூ.254 என்ற தற்போதைய விலையில் வாங்கும் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
ஐபிசிஏ: மோதிலால் ஓஸ்வால், IPCA பங்குக்கு ரூ.1950 இலக்கு விலையில், ரூ. 1584 என்ற தற்போதைய விலையில் வாங்கும் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
ஏஞ்சல் ஒன்: மோதிலால் ஓஸ்வால் ஏஞ்சல் ஒன் பங்குகளுக்கு வாங்கும் மதிப்பீட்டைப் பரிந்துரைத்துள்ளது. நிறுவனத்திற்கான இலக்கு விலை ரூ.4100 ஆக தற்போதைய விலையில் ரூ.2870 வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஃபைவ் ஸ்டார்: மோதிலால் ஓஸ்வால் ஃபைவ் ஸ்டார் பங்குகளை ரூ.1000 இலக்குடன் ரூ.882 ஆக வாங்க பரிந்துரைத்துள்ளது
ஆம்பர்: மோதிலால் ஓஸ்வால் ஆம்பர் பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளது. ஆம்பர் பங்குக்கு ரூ.7350 இலக்கு விலையில் ரூ.6250 என்ற தற்போதைய விலையில் வாங்கும் மதிப்பீட்டை வழங்கியுள்ளது.
ஜென் டெக்: மோதிலால் ஓஸ்வால், ஜென் டெக்கில் வாங்கும் மதிப்பீடுகளை பரிந்துரைத்துள்ளது. இந்த பங்குகளை ரூ.1900 இலக்கு விலையுடன் ரூ.1756 என்ற விலையில் மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications