தீபாவளி முகூர்த்த வர்த்தகம் 2026: முதலீட்டாளர்களே இந்த நேரத்த குறிச்சு வச்சிக்கோங்க..!!

இந்திய பங்குச்சந்தைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு 'முகூர்த்த வர்த்தகம்' (Muhurat Trading) நடைபெறும். இந்த ஆண்டு தேசிய பங்குச் சந்தை மற்று மும்பை பங்கு சந்தை சார்பில் முகூர்த்த வர்த்தகத்திற்கான தேதி, நேரம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

தசரா பண்டிகை காரணமாக இன்றைய தினம் பங்குச்சந்தைகள் செயல்படவில்லை. நாளை முதல் வழக்கம் போல செயல்படும். இந்நிலையில் முகூர்த்த வர்த்தகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதிய இந்து காலண்டர் ஆண்டின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளியின் போது சிறப்பு வர்த்தகம் நடத்தப்படுகிறது.

இந்து மரபில் தீபாவளி செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் லட்சுமி தேவியை வழிபடும் நாளாக இருப்பதால், புதிய முதலீடுகளை தொடங்குவதற்கு இந்த நாளை பலர் உகந்ததாக கருதுகின்றனர். இந்த நாளில் ஒரு பங்கையாவது வாங்குவதை புதிய நிதியாண்டின் தொடக்கத்திற்கான நல்ல அறிகுறியாக கருதுகின்றனர்.

தீபாவளி முகூர்த்த வர்த்தகம் 2026: முதலீட்டாளர்களே இந்த நேரத்த குறிச்சு வச்சிக்கோங்க..!!

இந்த ஆண்டுக்கான முகூர்த்த வர்த்தகம் நவம்பர் 8, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. வழக்கமான வர்த்தக நாட்களில் பங்கு சந்தையானது காலை 9:15 மணி முதல் மாலை 3:30 மணி வரை செயல்படும். ஆனால், முகூர்த்த வர்த்தகம் வழக்கத்தை விட குறைவான நேரமே நடைபெறும். மதியம் 2:20 மணி முதல் மாலை 3:30 மணி வரை இந்த சிறப்பு வர்த்தகம் நடைபெறும். வர்த்தகம் தொடங்குவதற்கு முன்பு 15 நிமிடங்களுக்கு ப்ரீ-ஓபன் அமர்வு இருக்கும்.

Also Read

இந்த சிறப்பு தீபாவளி அமர்வு பல்வேறு சந்தை பிரிவுகளை உள்ளடக்கியது. இதன்படி ஈக்விட்டி , கமாடிட்டி டெரிவேட்டிவுகள் , கரன்சி டெரிவேட்டிவுகள், ஈக்விட்டி ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ், செக்யூரிட்டீஸ் லெண்டிங் அண்ட் பாரோயிங் ஆகிய பிரிவுகளில் வர்த்தகம் நடைபெறும்.

இந்த முகூர்த்த வர்த்தகத்தின் போது புதிய முதலீடுகளை மேற்கொள்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. தீபாவளி மற்றும் லட்சுமி பூஜையை ஒட்டி வரும் இந்த சிறப்பு அமர்வு, புதிய இந்து காலண்டர் ஆண்டின் (சம்வத்) தொடக்கத்தை குறிக்கிறது. மேலும் இது செழிப்பு, வளம் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்துடன் தொடர்புடையதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இதனால் தான் ஆண்டு தோறும் முகூர்த்த வர்த்தகம் என்பது நடத்தப்படுகிறது.

Recommended For You

முதன்முறையாக பங்குச்சந்தைக்குள் வருபவர்கள், போர்ட்போலியோவை மாற்றி அமைப்பவர்களுக்கு எல்லாம் இது சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. வட இந்தியாவில் பெரும்பாலான மக்கள் இந்த நாளில் புதிய முதலீடுகளை தொடங்குவார்கள். அந்த வகையில் முகூர்த்த வர்த்தகத்தில் உங்கள் முதலீட்டு பயணத்தை தொடங்க் விரும்பினால் நீங்கள் இந்த நேரத்தை குறித்து கொண்டு வர்த்தகத்தை தொடங்கலாம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+