தீபாவளிக்கு முதலீடு செய்ய முத்தான 6 பங்குகள் - ஆனந்த் ரதி

பொதுவாக முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுக்கு நல்ல ஆதாயம் தரும் பங்குகளில் முதலீடு செய்ய விரும்புவர். இந்த தீபாவளி சீசனில் முதலீட்டு சிறந்த மற்றும் கவர்ச்சிகரமான ஆதாயம் தரும் சிறந்த 6 பங்குகளை ஆனந்த் ரதி நிறுவனத்தின் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மகிந்திரா, டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் பேங்க், டி.எல்.எஃப்., சிர்மா எஸ்.ஜி.எஸ். டெக்னாலஜி மற்றும் எம்.டி.ஏ.ஆர். டெக்னாலஜிஸ் ஆகிய 6 பங்குகளை வாங்கலாம் என மதிப்பீடு செய்துள்ளனர்.

மகிந்திரா அண்ட் மகிந்திரா: இப்பங்கினை வாங்கலாம் என்று ஆனந்த் ரதி ஆய்வாளர்கள் ரேட்டிங் வழங்கியுள்ளனர். இப்பங்கின விலை தற்போது ரூ.1,553.15ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,770ஆக நிர்ணயம் செய்துள்ளனர். மகிந்திரா நிறுவனம் உள்நாட்டில் டிராக்டர் சந்தையில் 43 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளனர். கடந்த ஜூன் காலாண்டில் மகிந்திரா நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது. கடந்த ஒராண்டில் இப்பங்கு 10 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.

தீபாவளிக்கு முதலீடு செய்ய முத்தான 6 பங்குகள் - ஆனந்த் ரதி

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி: இந்த பங்குக்கு வாங்கலாம் என நிபுணர்கள் ரேட்டிங் கொடுத்துள்ளனர். இப்பங்கின் இலக்கு விலை ரூ.1,850ஆக மதிப்பிட்டுள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.1,647.35ஆக உள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்ததது மேலும் சந்தையில் தனது நிலையை உறுதிப்படுத்தியது. கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஐ.டி.எஃப்.சி. பர்ஸ்ட் பேங்க் லிமிடெட்: இப்பங்கினை வாங்கலாம் என்று ஆய்வாளர்கள் மதிப்பீடு வழங்கியுள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.84.63ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.114ஆக நிர்ணயம் செய்துள்ளனர். கிரெடிட் கார்டுகள் மற்றும் மூன்றாம் தரப்பு விநியோகம் போன்ற கட்டண அடிப்படையிலான இந்நிறுவனத்தின் வர்த்தக வருவாய் எதிர்காலத்தில் வலுவான வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த ஒராண்டில் இப்பங்கு 45 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.

டி.எல்.எஃப். லிமிடெட்: இப்பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டை நிபுணர்கள் மாற்றமின்றி வைத்துள்ளனர். இப்பங்கின் இலக்கு விலையாக ரூ.640ஆக நிர்ணயம செய்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.600.80ஆக உள்ளது. டி.எல்.எஃப். நிறுவனம் அந்தேரி மேற்கில் ஒரு சேரி மறுமேம்பாடு திட்டத்தின் மூலம் மும்பை சந்தையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறது. மேலும் டெல்லி என்.சி.ஆர். பிராந்தியத்தில் வலுவான இருப்பு ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு சாதகமாக உள்ளது. கடந்த ஒராண்டில் இப்பங்கு விலை 49 சதவீதம் அதிகரித்துள்ளது.

சிர்மா எஸ்.ஜி.எஸ். டெக்னாலஜி லிமிடெட்: என்ஜினீயரிங் மற்றும் டிசைன் நிறுவனமான இப்பங்கினை வாங்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.531.65ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.735ஆக நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த ஒராண்டில் இப்பங்கின் விலை 83 சதவீதம் உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி திறன் அதிகரிப்பு போன்ற காரணங்களால், 2023 முதல் 2025 நிதியாண்டு வரையிலான காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபம் ஆகியவற்றில் வலுவான ஆண்டு வளர்ச்சி விகிதம் என்று ஆனந்த் ரதி மதிப்பிட்டுள்ளது.

எம்.டி.ஏ.ஆர். டெக்னாலஜிஸ் லிமிடெட்: இப்பங்கினை வாங்கலாம் என்று ஆய்வாளர்கள் ரேட்டிங் வழங்கியுள்ளனர். தற்போது இப்பங்கின் விலை ரூ.2,262.45ஆக உள்ளது. இப்பங்கின் இலக்கு விலை ரூ.2,970ஆக நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த ஒராண்டில் இப்பங்கு 60 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. கடந்த ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 68 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+