இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிகானிஸ் உற்பத்தி சேவை நிறுவனமான டிக்சன் டெக்னாலஜிஸ்-ன் துணை நிறுவனமான பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனம் தற்போது லெனோவா நிறுவனத்துக்கு லேப்டாப்கள் மற்றும் நோட்புக்ஸ் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் ஏற்கனவே இந்தியாவில் சியோமி-யின் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.

இது தொடர்பாக டிக்சன் டெக்னாலஜிஸ் கடந்த 11ம் தேதியன்று பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு முழு சொந்தமன பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு திட்டம் 2.0ன் கீழ், லேப்டாப்கள் மற்றும் நோட்புக்ஸ்-களை தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை லெனோவா வழங்கியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வெளியானதையடுத்து இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கின் விலை 52 வார கால உச்சமாக ரூ.6,764ஐ எட்டியது. இருப்பினும் அதன் பிறகு பங்கின் விலையில் சரிவு ஏற்பட்டது.
டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துணை தலைவரும், நிர்வாக இயக்குனருமான அதுல் பி. லால் கூறுகையில், லெனோவா நிறுவனம் ஐ.டி. ஹார்டுவேர் தயாரிப்புகளை எவ்வாறு தயாரிப்பது மற்றும் செயல்முறைகளை உலகளவில் கொண்டு வரும். டிக்சன் மீது லெனோவா வைத்துள்ள நம்பிக்கையால் நாங்கள் மகிழ்ச்சி மற்றும் ஊக்கம் அடைகிறோம்.

மேலும் இந்த கூட்டணி எங்களின் சிறப்பையும், சிறந்த செயல்பாட்டின் சாதனையையும் மேம்படுத்தும் என்று நம்புகிறோம். மேலும் இது இந்திய அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா முயற்சியில் ஒரு முக்கிய மைல்கல்லை பிரதிபலிக்கிறது.
லெனோவா அவர்களின் மலிவு விலை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட தயாரிப்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த கூட்டணி இந்தியாவில் உள்ளூர்மயமாக்கல் மற்றும் ஒருங்கிணைந்த அமைப்பு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.
அண்மையில் பேட்ஜெட் எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இந்தியாவில் சியோமி ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்காக உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் கடந்த நவம்பர் 30ம் தேதியன்று புதிய அதிநவீன ஸ்மார்ட்போன் உற்பத்தி ஆலையை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications