Dixon பங்கு விலை ரு.18,000ஐ கடந்தது.. இனியும் முதலீடு செய்யலாமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?

மும்பை: இந்தியாவின் மல்டிபேக்கர் பங்கான டிக்சன் டெக்னாலஜிஸ் பங்கு மதிப்பு முதன்முறையாக 18,000 ரூபாயை கடந்தது. வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் இதன் பங்கு மதிப்பு 1.89 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கு 18,000 ரூபாய் என்ற அளவை கடந்தது. இதன் மூலம் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 1.07 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. எனவே தரகு நிறுவனங்கள் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கினை வாங்கலாம் என்ற மதிப்பீட்டின் கீழ் வைத்துள்ளன.

ஜப்பானை சேர்ந்த தரகு நிறுவனமான நோமுரா டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் அண்மையில் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன் உற்பத்தியை அதிகப்படுத்தி இருப்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனம் இன்னும் வளர்ச்சி அடையும் என்றும் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும் என்றும் நோமுரா கணிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தின் வருமானத்தில் கூடுதலாக 1500 கோடி ரூபாய் சேரப் போகிறது என குறிப்பிட்டுள்ள நோமுரா இதற்கு ஸ்மார்ட் போன் விற்பனை முக்கிய காரணமாக இருக்கும் என கூறியுள்ளது.

Dixon பங்கு விலை ரு.18,000ஐ கடந்தது.. இனியும் முதலீடு செய்யலாமா.. நிபுணர்கள் சொல்வது என்ன?


அதேபோல ஷேர் கான் என்ற தரகு நிறுவனமும், டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்துள்ளது. இதன் ஒரு பங்கு மதிப்பு 18,800 ரூபாயை அடையும் என கூறியுள்ளது. அண்மையில் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூகுள், ஹெச்பி மற்றும் ஆசுஸ் ஆகிய நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை பெற்றிருப்பதே இதற்கு காரணம் என ஷேர் கான் கூறுகிறது .

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் தங்களுடைய ஐடி ஹார்டுவேர் பிரிவு மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என நம்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் தங்கள் நிறுவனத்தின் வருமானத்தில் மொபைல் பிரிவில் கணிசமான லாபம் கிடைக்கும் என டிக்சன் டெக்னாலஜிஸ் கூறியுள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 186 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் 265 சதவீதம் அதிகரித்துள்ளது. 412 கோடி நிகர லாபம் ஈட்டி இருப்பதாக தெரிவித்துள்ள டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் இதில் 209 கோடி மொபைல் போன் உற்பத்தியில் மட்டுமே கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெறும் 113 கோடி மட்டுமே லாபமாக பெற்றிருந்தது. இந்த நிறுவனத்தின் வருமானமும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 133 சதவீதம் உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலானா காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 4944 கோடி ரூபாய் தற்போது 11534 கோடி என உயர்ந்துள்ளது.

Story Written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+