இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரீடைல் வர்த்தகச் சந்தையில் சரியான திட்டமிடல் உடன் நிலையான வளர்ச்சி மூலம் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராதாகிஷன் தமனியின் டீமார்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் இன்று 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு உள்ளது.

டிமார்ட் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 2020ல் கொரோனா தொற்றுக் காரணமாக அதிகளவில் குறைந்தாலும், டிசம்பர் காலாண்டில் பெரிய அளவிலான வளர்ச்சியை எதிர்கொண்டது. இதனால் இந்நிறுவனத்தின் வர்த்தகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
மேலும் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனையில் ஜியோமார்ச், அமேசான், பிளிப்கார்ட் வந்த நிலையில் டிமார்ட் வர்த்தகம் கணிசமாகச் சரிந்தது. ஆனால் சில மாதங்களிலேயே டிமார்ட் பல்வேறு மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் புதிய ஆன்லைன் விற்பனை தளத்தை அறிமுகம் செய்து நாட்டின் பெரு நகரங்களில் ஆன்லைன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டிமார்ட்-ன் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 35 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தத் தொடர் வளர்ச்சியின் காரணமாக இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு இன்று 2 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் டிமார்ட் பங்குகள் 3,225 ரூபாய் வரையில் உயர்ந்தது, ஆனால் வர்த்தக முடிவில் 1.54 சதவீதம் சரிவில் 3,138.75 ரூபாய் அளவீட்டை அடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

கேரள சம்மர் பம்பர் லாட்டரி BR-108 முடிவுகள் ரூ.10 கோடி ஜாக்பாட் யாருக்கு?

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications