52 வார குறைந்தபட்ச விலையில் இருந்து 115% ஏற்றம்.. மல்டிபேக்கர் பங்கினை வாங்கியிருக்கீங்களா?

பொதுவாக பங்கு சந்தையில் ஒரு நல்ல நிறுவனத்தின் பங்கின் விலை குறைந்தால், அதனை வாங்க சரியான இடமாக பார்க்கப்படுகிறது.

அப்படி 52 வார விலையில் இந்த பங்கினை வாங்கியிருந்தால், இன்று நீங்கள் லட்சாதிபதிதான்.

அப்படி என்ன பங்கு இது? இதனை ஏன் வாங்க வேண்டும்? இதன் தற்போதைய நிலவரம் என்ன? இனியும் வாங்கலாமா? வேண்டாமா? வாருங்கள் பார்க்கலாம்.

 ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ்

இன்று நாம் பார்க்கவிருக்கும் நிறுவனம் ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலையில் இருந்து, 115% ஏற்றம் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 50.05 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதிகபட்சமாக 107.50 ரூபாயாக அதிகரித்திருந்தது.

இன்று நாம் பார்க்கவிருக்கும் நிறுவனம் ஜம்னா ஆட்டோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது அதன் 52 வார குறைந்தபட்ச பங்கு விலையில் இருந்து, 115% ஏற்றம் கண்டுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலை 50.05 ரூபாயாகும். இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று அதிகபட்சமாக 107.50 ரூபாயாக அதிகரித்திருந்தது.

 

 இன்றைய விலை நிலவரம்?

இன்றைய விலை நிலவரம்?

எனினும் முடிவில் 1.74% வீழ்ச்சி கண்டு, 104.55 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் 52 வார உச்ச விலையானது 118.90 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலையானது 50 ரூபாயாகும். இன்றைய உச்ச விலை 107.50 ரூபாயாகவும், இதே குறைந்தபட்ச விலை 100.40 ரூபாயாகும்.

இதே பி எஸ் இ-ல் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 2.35% விலையானது சரிவினைக் கண்டு, 103.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

 

 முடிவு விலையில் இருந்து சரிவு?

முடிவு விலையில் இருந்து சரிவு?

இந்த நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவானது வெளியான நிலையில், இந்த பங்கின் விலையானது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றது. இன்று சற்று குறைந்து முடிவடைந்துள்ள நிலையில், கடந்த அமர்வில் இந்த பங்கின் விலையானது 106.35 ரூபாயாக முடிவுற்றது குறிப்பிடத்தக்கது. ஆக அதனுடன் ஒப்பிடும்போது 2.35% கீழாக காணப்படுகின்றது.

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

டெக்னிக்கலாக எப்படியுள்ளது?

4,138 கோடி ரூபாய் சந்தை மதிப்பினை கொண்டுள்ள இந்த நிறுவனம் , 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜீக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 5 நாள், 20 நாள், மூவிங்க் ஆவரேஜ்ஜீக்கு கீழாக வர்த்தகமாகி வருகின்றது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பங்கில் முதலீடு செய்திருந்தால் இன்றைய மதிப்பு 1,000%க்கும் மேல்.

 

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

வேகமான டெலிவரிகளுக்கு ஈகாமர்ஸ் துறையில் கனரக வாகனங்கள் தேவை அதிகரித்து வரும் நிலையில், டிரக்குகள் தேவையில் கூர்மையான உயர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கட்டுமானம் மற்றும் சுரங்கத்துறையிலும் வளர்ச்சி காணும் நிலையில் தேவை அதிகரிக்கலாம். ஈகாமர்ஸ் துறைக்காக வாகனங்கள் ஒவ்வொரு நா0ளும் நெடுந்தூரம் பயணிக்கின்றன. இது வரும் காலத்தில் இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.

வளர்ச்சி பாதை

வளர்ச்சி பாதை

தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், தடுப்பூசிகளின் விகிதமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி குறித்தான காரணிகள் மேற்கொண்டு அதிகரிக்க கூடும். இது தேவையை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக டெக்னிக்கலாக எம் ஏ சி டி, பொலிங்கர் பான்ட், கே.எஸ்.டி, டவ் மற்றும் OBV உள்ளிட்ட குறியீடுகள் இந்த பங்கிற்கு சாதகமாகவே உள்ளன.

பங்கு முதலீடு அதிகரிப்பு

பங்கு முதலீடு அதிகரிப்பு

முந்தைய காலாண்டினை காட்டிலும் செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தில் நிறுவன முதலீட்டாளர்கள் 1.65% மேலான பங்குகள் அதிகரித்துள்ளனர். இதன் காரணமாக மொத்தம் 18.92% பங்கினை நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டாக வைத்துள்ளனர். இதுவும் இந்த நிறுவனத்தின் பங்கினை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+