இந்திய பங்குச் சந்தைகளின் போக்கு தற்போது ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இருப்பினும், பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டில் (ஐபிஓ) களம் இறங்கி வெற்றிகரமாக நிதி திரட்டி வருகின்றன. இது, முதலீட்டாளர்களின் வலுவான ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது.
உதாரணமாக கடந்த வாரம் பங்குச் சந்தையில் டென்டா வாட்டார் அண்ட் இன்.ப்ரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ நடந்தது. இந்நிறுவனத்தின் ஐபிஓ அளவை காட்டிலும் 221.5 மடங்கு பங்கு வேண்டி அதிக விண்ணப்பங்கள் வந்தன. 2025ம் ஆண்டில் பங்கு வேண்டி அதிக விண்ணப்பம் வந்த ஐபிஓவாக மாறியது.

வரும் வாரத்தில் பங்குச் சந்தையில் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கி நிதி திரட்ட 2 நிறுவனங்கள் தயாராக உள்ளன. டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் மற்றும் மால்பனி பைப்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அடுத்த சில தினங்களில் ஐபிஓவில் களம் காண உள்ளன.
டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் கண் பராமரிப்பு சேவை வழங்குகிறது. இந்நிறுவனத்தில் புரோமோட்டர்கள் 37.83 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டுள்ளனர். டிபிஜி நிறுவனம் 33.75 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ளது. அதேவேளையில், டெமாசெக் 28.18 சதவீத பங்கு மூலதனத்தை தன் வசம் வைத்துள்ளது.
டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் ஐபிஓ வரும் 29ம் தேதி தொடங்குகிறது. சுமார் ரூ.3 ஆயிரம் கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை இப்பங்குகள் முதலீட்டாளர்கள் விண்ணப்பிக்கலாம். ஐபிஓவில் பங்கு ஒன்றின் விலை ரூ.382-402 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மல்பானி பைப்ஸ் அண்ட் பிட்டிங்ஸ் நிறுவனம் பிளாஸ்டிக் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். எச்டிபிஇ பைப்கள் உள்ளிட் பல தயாரிப்புகளில் இந்நிறுவனம் நிபுணத்துவம் பெற்றது. மல்பானி பைப்ஸ் அண்ட் பிட்டிங்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ வரும் புதன்கிழமை (29ம் தேதி) தொடங்குகிறது.
அன்று முதல் 31ம் தேதி வரை முதலீட்டாளர்கள் இப்பங்குகள் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனம் மொத்தம் 28.80 லட்சம் புதிய பங்குகளை வெளியிட்டு மொத்தம் ரூ.25.92 கோடி திரட்ட உள்ளது. ஐபிஓவில் பங்கு ஒன்றின் விலை ரூ.85-90ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!



Click it and Unblock the Notifications