இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியா (எல்ஐசி), டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை அதிகரித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான தடுமாற்றங்களை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் பெரும் முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு வேகத்தை குறைத்துள்ளனர்.
இதனால் முன்பு போல் ரீஸ்க் எடுத்து அதிகப்படியான முதலீடுகளை செய்யாமல் நீண்ட கால அடிப்படையில் நிச்சயம் லாபம் அளிக்கும் பங்குகளில் மட்டுமே தற்போது பெரும் முதலீட்டாளர்கள் பணத்தை கொட்டுகிறார்கள். இந்த வகையில் இந்தியாவில் அரசு தரப்பில் பங்குச்சந்தையில் பெரிய முதலீட்டாளராக இருக்கும் எல்ஐசி கடந்த ஒரு மாதத்தில் பல நிறுவனங்களில் முதலீடு செய்து தனது பங்கு இருப்பை அதிகரித்துள்ளது.

இப்படி எல்ஐசி முதலீடு செய்த ஒரு நிறுவனம் தான் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ், பங்குச் சந்தையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தாக்கலின்படி, எல்ஐசி 1.67 கோடி பங்குகளை வாங்கியதன் மூலம், இந்த மருந்து நிறுவனத்தில் தனது பங்கு இருப்பை 8%க்கு மேல் உயர்த்தியுள்ளது. இந்த திடீர் முதலீட்டு அறிவுப்புக்கு ஏற்றார் போல் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் புதிய கூட்டணி: டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் உலகளாவிய பயோடெக் நிறுவனமான ஆல்வோடெக் உடன் இணைந்து புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கீட்ரூடா (pembrolizumab) மருந்தின் பயோசிமிலர் மருந்தை உருவாக்கவும், உற்பத்தி செய்யவும், உலக சந்தைகளில் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டில், கீட்ரூடா மருந்தின் உலகளாவிய விற்பனை அளவு 29.5 பில்லியன் டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் பங்குகள்: இந்த இரு தகவல்களும் இன்று பங்குச்சந்தையில் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் பங்குகளின் மதிப்பை உயர்த்தியுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் 1252.15 ரூபாய் முடிந்த டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 1303.45 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
எல்ஐசி, டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் 1,67,89,472 பங்குகளை, அதாவது 2.012% பங்குகளை, திறந்த சந்தையில் வாங்கியது. இந்த பங்குகள் 2024 அக்டோபர் 28 முதல் 2025 ஜூன் 3 வரை வாங்கப்பட்டன. இந்த பரிவர்த்தனைக்கு முன், எல்ஐசி 5,17,69,600 பங்குகளை (6.204% பங்கு) வைத்திருந்தது. தற்போது, மொத்தமாக 6,85,59,072 பங்குகளுடன் (8.216% பங்கு) இந்நிறுவனத்தில் எல்ஐசியின் பங்கு இருப்பு உயர்ந்துள்ளது.
கடந்த மூன்று காலாண்டுகளாக எல்ஐசி நிறுவனம் டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் பங்கு இருப்பை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 செப்டம்பர் இறுதியில் 5.6% ஆக இருந்த பங்கு, 2024 டிசம்பரில் 6.5% ஆகவும், 2025 மார்ச் மாதத்தில் 7.19% ஆகவும் உயர்ந்தது. தற்போது 8.216% ஆக உயர்ந்துள்ளது.
டாக்டர் ரெட்டிஸ் லேபரேட்டரீஸ் நிறுவன பங்குகள் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 சதவீதம் உயர்ந்துள்ளது, 3 மாதங்களாக மோசமான வர்த்தகத்தை பதிவு செய்து வந்த நிலையில் தற்போது 10 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. எல்ஐசி பங்கு இருப்பு உயர்வு மற்றும் ஆல்வோடெக் உடனான கூட்டணி அறிவிப்பு தொடர்ந்து வளர்ச்சி பாதைில் வைத்திருக்க உதவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications