இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் பலத்த வீழ்ச்சி காணும்.. காரணம் இது தான்..!

இந்திய ரிசர்வ் வங்கி தனியார் வங்கியான யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ள நிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74 ரூபாயினை தொட்டுள்ளது.

இன்று காலையில் 74.09 ரூபாய் என்ற நிலையில் இருந்த ரூபாய் மதிப்பு, தற்போது 73.64 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் என்றும் கூறப்படுகிறது.

பலத்த வீழ்ச்சி

பலத்த வீழ்ச்சி

இந்தியாவின் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்திய ரூபாயின் மதிப்பினையும் பலவீனப்படுத்தியுள்ளது. குறிப்பாக சொல்லப்போனால் நேற்றைய முடிவில் 73.31 ரூபாயாக முடிவடைந்த ரூபாயின் மதிப்பு இன்று காலையில் தொடக்கத்திலேயே 73.96 ஆக வீழ்ச்சி கண்டு தான் தொடங்கியது. இந்த நிலையில் அதிகபட்சமாக 74.09 வரை சென்று வீழ்ச்சி கண்டது. எனினும் தற்போது 73.64 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

கொரோனா வைரஸ் பரவல் ஒரு புறம் எனில், ரிசர்வ் வங்கி தனியார் வங்கியான யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒரு காலத்தில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் வங்கியாக இருந்த யெஸ் வங்கியினை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பபாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஏனெனில் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிதி நிலையினை காரணம் காட்டி இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும்

ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்படும்

அதுமட்டும் அல்லாது வாடிக்கையாளார்கள் 50,000 ரூபாய் மட்டும் திரும்ப எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது. எனினும் அவசர தேவைக்கு மேலாளரின் அனுமதியுடன் 5 லட்சம் ரூபாய் வரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மேலும் எஸ்பிஐயின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் வங்கி நிர்வாகம் செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த பாதிப்பும் இருக்காது

எந்த பாதிப்பும் இருக்காது

அடுத்து வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வரை யெஸ் வங்கிக்கு எதிராக எந்தவிதமான சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்க முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கையினால் வாடிக்கையாளர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ரிசர்வ் வங்கி, வாடிக்கையாளர்களின் பணத்திற்கும், அதற்கான வட்டிக்கும் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது.

கடன் குறியீடு எதிர்மறையாகும்

கடன் குறியீடு எதிர்மறையாகும்

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்ல்கை மீட்பு நடவடிக்கையாக இருந்தாலும், இது யெஸ் பேங்கின் கடன் குறியீட்டை எதிர்மறையானதாக ஆக்குகிறது. இது வங்கி வைப்பு தொகையாளர்கள் மற்றும் கடன் வழங்குனர்கள் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துதலையும் பாதிக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

பங்கு சந்தைகளில் அழுத்தம்

பங்கு சந்தைகளில் அழுத்தம்

இந்தியா ஏற்கனவே பொருளாதார மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், அதிலும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளது. யெஸ் பேங்கின் மீதான இந்த தீவிர நடவடிக்கையானது சென்செக்ஸ், நிஃப்டி, ரூபாய் ஆகியவற்றையும் கடுமையாக வீழ்ச்சியடைய செய்துள்ளது.

வங்கி பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி

வங்கி பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி

இதன் மத்தியில் இன்று சென்செக்ஸ் 1,400 புள்ளிகளுக்கும் மேல் வீழ்ச்சி கண்டிருந்தது. குறிப்பாக வங்கிப் பங்குகள் அனைத்தும் வீழ்ச்சி கண்டன. உலகளாவிய அளவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உலகளாவிய இடர் உணர்வு மிகவும் மோசமாக உள்ளது என்று ஆய்வாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

ஆசிய நாணயங்கள் வீழ்ச்சி தான்

ஆசிய நாணயங்கள் வீழ்ச்சி தான்

ரூபாய் மட்டும் அல்ல, அமெரிக்கா டாலருக்கு எதிரான ஆசிய நாணயங்கள் அனைத்தும் பலவீனமான வீழ்ச்சி கண்டுள்ளன. சில கார்ப்பரேட்டுகள் பலவீனமான ரூபாய், தங்கள் கடன் செலவுகளை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளன. வீழ்ச்சியடைந்த ரூபாய் அதன் கடன் செலவினங்களை அதிகரிக்கும் என்றும் ஹெச்.பி.சி.எல் தலைவர் எம் கே சுரானா தெரிவித்துள்ளார். இதே போல் பலவீனமான ரூபாயின் மதிப்பால், இன்று 10 கிராம் தங்கத்தின் விலையானது 45,000 ரூபாய்க்கு அருகில் உள்ளது.

இந்த விகிதத்தில் இருக்கலாம்

இந்த விகிதத்தில் இருக்கலாம்

கொரோனாவின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் இந்த நிலையில் சில ஆய்வாளர்கள் ரூபாயின் மதிப்பு 72 - 75 ரூபாய் வரையில் இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். சில ஆய்வாளர்கள் தங்களது நேரடி முதலீடுகளை இந்தியாவில் இருந்து திரும்ப எடுத்து செல்லலாம். இது இந்திய பொருளாதாரத்தில் பிரதிபலிக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+