எண்ணெய் விலை குறைவு எதிரொலி.. ஒரே நாளில் 4% வரை அதிரடியாக உயர்ந்த நிறுவனங்களின் பங்குகள்..!!

ஜூன் 11ஆம் தேதியான இன்று எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMC) மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் அதிரடியாக உயர்ந்துள்ளன. பங்குகளின் வேகமான உயர்வால் நிஃப்டி எண்ணெய் மற்றும் எரிவாயு குறியீடு (Nifty Oil & Gas index) இன்று சுமார் 1.7 சதவீதம் உயர்ந்தது. இதற்கு முக்கிய காரணம், அமெரிக்காவின் ஒரு நிறுவனம், எண்ணெய் விலை குறுகிய காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக கூறியதுதான்.

அமெரிக்க ஆற்றல் தகவல் நிர்வாகம் (US Energy Information Administration) உலகளாவிய கையிருப்புகள் அதிகரிப்பதால், எண்ணெய் விலை குறைவாக இருக்கும் என கணித்துள்ளது. மே மாதத்தில் $64 இருந்த Brent crude எண்ணெய் விலை, 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் $61 ஆகவும், 2026ஆம் ஆண்டில் சராசரியாக $59 ஆகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் விலை குறைவு எதிரொலி.. ஒரே நாளில் 4% வரை அதிரடியாக உயர்ந்த நிறுவனங்களின் பங்குகள்..!!

இன்று (ஜூன் 11) லண்டனில் நடைபெற்ற அமெரிக்க - சீன வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் தாக்கத்தை தொடர்ந்து, எண்ணெய் விலைகள் தணிந்தன. ஆனால், அவை இன்னும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை. சீனாவின் பலவீனமான தேவை மற்றும் குறைந்த OPEC+ உற்பத்தி ஆகியவை எண்ணெய் விலைகளை தொடர்ந்து பாதித்து வருவதாக கூறப்படுகிறது. ராய்ட்டர்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, Brent crude எதிர்பார்ப்பு விலை 0.3 சதவீதம் குறைந்து $66.680 ஆகவும், அமெரிக்காவின் West Texas Intermediate crude 0.3 சதவீதம் குறைந்து $64.82 ஆகவும் உள்ளது. இந்நிலையில், முதலீட்டாளர்கள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தையின் முடிவைப் பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

மேலும், பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பும், அதன் கூட்டாளிகளும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சாதகமானதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இது சில்லறை எரிபொருள் விற்பனையில் அவர்களது மொத்த சந்தைப்படுத்தலை மேம்படுத்தும். ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவற்றின் பங்குகள் சுமார் 4% உயர்ந்து, முறையே ரூ.421 மற்றும் ரூ.332 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டன.

இந்திய ஆயில் கார்ப்பரேஷன் பங்குகள் 2.5 சதவீதம் உயர்ந்து, சுமார் ரூ.146 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் பங்குகள் சுமார் 1.6 சதவீதம் உயர்ந்து, ரூ.1,461 என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்றது. இந்தியாவின் மிக மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ், சென்செக்ஸில் மிக உயர்வான பங்கு வளர்ச்சியை பெற்ற நிறுவனமாக பதிவாகியுள்ளது. அதேபோல், Oil India பங்குகளும் சுமார் 3% உயர்ந்து, ரூ.449 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டன.

எண்ணெய் விலை குறைவால் பங்குகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், Avendus Spark நிறுவனம் அந்த பங்குகளை வாங்க அழைப்பு கொடுத்ததை அடுத்து, இந்த விலை உயர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு மற்றும் அதன் நட்பு நாடுகளின் உற்பத்தி உயர்வு குறித்த கவலைகள் காரணமாக, ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $70-க்கும் குறைவாகவே உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+